Ad Space Available here

எமது முடிவு தப்­பா­கி­விட்­டது ; சிவில் அமைப்­புக்கள் சாடல்


(ஆர்.யசி)

நல்­லாட்­சியை நோக்­கிய பய­ணத்தில் சிவில் அமைப்­புகள் செய்த பங்­க­ளிப்பு மற்றும் மக்­களை அர­சாங்­கத் தின் பக்கம் திருப்­பிய அனைத்து விட­யங்­களும் இன்று கேள்­விக்கு உள்­ளா­கி­விட்­டன. நல்­லாட்சி புத்­த­கத்தை மீண்டும் ஒரு­முறை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் படிக்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. 

நாம் ஏற்­ப­டுத்­திய அர­சாங்கம் தப்­பா­ன­தா­கி­விட்­டது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம் என சிவில் அமைப்­புக்கள் தெரி­வித்­துள்­ளன.  நல்­லாட்­சியை முன்­னெ­டுக்கும் பய­ணத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பின்­னிற்­கின்­றனர். 

நல்­லாட்­சியின் பக்கம் இவர்­களை திருப்ப எம்­மா­லான சகல அழுத்­தங்­க­ளையும் நாம் வழங்­குவோம் எனவும் சிவில் அமைப்­புக்கள் குறிப்­பிட்­டுள்­ளன.  புர­வசி பலய உள்­ளிட்ட சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் நேற்று மரு­தானை சன­ச­மூ­க­நி­லை­யத்தில் நடத்­திய விசேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர் .

இதில் கருத்து தெரி­வித்த கலா­நிதி காமினி வியங்­கொட குறிப்­பி­டு­கையில்  சுயா­தீன நிறு­வ­னங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த கருத்­துக்கள் இன்று அனைவர் மத்­தி­யிலும் பாரிய கருத்து முரண்­ப­டு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சிக்குக் கொண்­டு­வந்த எம்­மீதும் பல்­வேறு கேள்­விகள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. 

ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­தி­ருப்­பது தொடர்பில் நாம் என்ன செய்­யப்­போ­கின்றோம் என மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் எம்­மி­டமே கேலி­யாக கேட்­கின்­றனர். ஆனால் சிவில் அமைப்­புகள் என்ற வகையில் நாம் ஜனா­தி­ப­தியின் கருத்­தினை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­து­விட்டார்.  தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வியை சந்­தித்த பின்னர் மிகக் குறு­கிய காலத்தில் மீண்டும் அவர் மக்கள் மத்­தியில் பல­மான நப­ராக எழுந்­துள்ளார் என்றால் அது நல்­லாட்­சியின் தோல்­வி­யென்றே கூற­வேண்டும்.

 அவ்­வாறு இருக்­கையில் மீண்டும் மீண்டும் ஜனா­தி­பதி இவ்­வா­றான கதை­களை கூறு­வது நல்­லாட்­சியின் இலட்­சினை அல்ல. இந்த அர­சாங்­கத்தை நம்பி வாக்­க­ளித்த 62இலட்சம் மக்­க­ளுக்கும் இவர்கள் நம்­பிக்­கை­யி­ழந்த தலை­மை­க­ளாக மாறி­வ­ரு­கின்­றனர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ மற்றும் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் மூவரை விசா­ரித்­தமை தவ­றா­னது என்றும் தனக்கு இந்த விடயம் தெரி­யாது எனவும் அவர் கூறி­யி­ருப்­பது தனது கட்சி அர­சி­யலை பலப்­ப­டுத்­தவும் மஹிந்த மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­னரை காப்­பாற்­றவும் எடுக்கும் முயற்­சி­யா­கவே கரு­தப்­பட முடியும்.  

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் நகர்­வுகள் அடுத்­த­கட்ட அர­சியல் பய­ண­மா­கவே அமைந்­துள்­ளன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வதை எடுத்து நாட்டை ஆளும் ஆசை அவ­ருக்கும் வந்­துள்­ளது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் வெறு­மனே நிதி மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் மட்­டு­மல்ல அதையும் தாண்­டிய பல்­வேறு குற்­ற­சாட்­டுகள் உள்­ளன. 

அவ்­வா­றான நபர்­களை மீண்டும் ஆட்­சிக்குள் கொண்­டு­வந்தால் அது நாட்டை நாசப்­ப­டுத்தும் செய­லா­கவே அமைந்­து­விடும். இன்று மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்­த­தையே அன்று மஹிந்த ராஜபக் ஷவும் மேற்­கொண்டார். சுயா­தீன அமைப்­பு­களில் முழு­மை­யான அர­சியல் தலை­யீ­டு­களை ஏற்­ப­டுத்தி நாட்டின் சுயா­தீ­னத்­தன்­மையை முழு­மை­காக சீர­ழித்தார்.

 தமக்கு வேண்­டி­ய­வர்கள் தமது விசு­வா­சிகள், தமக்­காக வாக்­க­ளித்த மக்­க­ளுக்­காக மாத்­தி­ரமே அவ­ரது ஆட்சி சாத­க­மாக அமைந்­தது. அதேபோல் இரா­ணு­வத்தில் பல்­வேறு குற்­றங்கள், நடை­பெற்ற போது அவற்றை கருத்­தில்­கொள்­ளாது இரா­ணுவ அதி­கா­ரி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கையை மாத்­தி­ரமே அவர் மேற்­கொண்டார்.

 அதே பாணியில் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பய­ணிக்க ஆரம்­பித்­துள்ளார். தனது விசு­வா­சி­களை பாது­காக்­கவும் குற்­ற­வா­ளி­களை பாது­காக்­கவும் அவர் முன்­வந்­துள்ளார். தமக்கு வேண்­டிய ஒரு சிலரை காப்­பாற்­றவும் வேண்­டாத நபர்கள் மீது மாத்­திரம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு தண்­டிக்க முயற்­சிப்­பதும் நல்­லாட்­சியின் பண்­பல்ல. சக­ல­ருக்கும் ஒரே வகையில் சட்டம் செயற்­பட வேண்டும்.  

எனினும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தமக்கு வேண்­டப்­பட்ட முக்­கி­ய­மான குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி வரு­கின்­றனர். மத்­தி­ய­வங்கி முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் விட­யத்தில் மிகப்­பெ­ரிய குற்றம் மறைக்­கப்­பட்டு இன்­று­வ­ரையில் அவர்­க­ளுக்கு எதி­ரான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டாது உள்­ளது.

 அதேபோல் கோத்­த­பாய ராஜபக் ஷ மற்றும் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் விவ­கா­ரத்தில் குற்றம் நிரு­பிக்­க­படும் தரு­வாயில் இருந்தும் இவர்­களை காப்­பாற்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முயற்­சித்து வரு­கின்றார். 

ஜன­வரி எட்டாம் திகதி நாட்டில் ஏற்­பட்ட மாற்றம் ஜன­நா­ய­கத்தை மாத்­திரம் அல்ல சுயா­தி­னத்­தையும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­வுமே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும் நல்­லாட்­சியை முன்­னெ­டுக்கும் பய­ணத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பின்­னிற்­கின்­றனர். 

இவர்­களின் நகர்­வினால் மீண்டும் நாட்டில் இன­வாத சக்­தி­க­ளுக்கே பலம் அதி­க­ரிக்கும். ஆகவே நல்­லாட்­சியை பலப்­ப­டுத்த இவர்கள் கொடுத்த வாக்­கு­று­தி­களை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும் என்றார்.  கலா­நிதி சரத் விஜ­ய­சூ­ரிய கருத்து தெரி­விக்­கையில்,  

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது குடும்­பத்தை பாது­காக்க வேண்­டிய கட்­டா­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ர­பால சிறி­சேன உள்ளார். குற்­ற­வா­ளிகள் யார் என்­பது தெளி­வக தெரிந்தும் அவர்­க­ளுக்­காக ஜனா­தி­பதி துணை நிற்­பது நல்­லட்­சி­யி­யையே கேள்­விக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. 

குற்­ற­வா­ளி­க­ளுக்­காக சட்­டமும், சுயா­தீன நிறு­வ­னங்­களும் செயற்­ப­டு­வதை சிவில் அமைப்­பு­க­ளாக நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். தாஜுதீன், எக்­னே­லி­கொட, ரவிராஜ் உள்­ளிட்ட பல­ரது கொலைகள், பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்­டமை, பலர் நாடு­க­டத்­தப்­பட்­டமை தொடர்பில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் இவர்கள் மீது உள்­ளன.

 இவர்கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களில் 95வீத­மான குற்­றச்­சாட்­டுக்கள் விசா­ரிக்­கப்­பட்­டதில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் குற்­ற­வாளி என நிரூ­ப­ன­மா­கி­யுள்­ளது. ஆனால் நீதி அமைச்­சரின் தனிப்­பட்ட தலை­யீ­டுகள் இவர்­களை காப்­பாற்றி வரு­கின்­றது. 

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் சுயா­தீன நட­வ­டிக்­கைகள் இல்­லாத கார­ணத்­தினால் தான் இந்த ஆட்­சியில் நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஆகி­யவை உரு­வாக்­கப்­பட்­டன. ஆனால் அதிலும் அர­சியல் தலை­யீ­டுகள் ஏற்­பட்­டுள்­ளன என்றால் சுயா­தீனம் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

ஜன­வரி எட்டாம் திகதி நாட்டில் ஏற்­பட்ட மாற்­றத்தில் நல்­லாட்­சியை உரு­வாக்கும் பய­ணத்தில் முக்­கி­ய­மான மூன்று பேர் பிர­தா­ன­மாக காணப்­பட்­டனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொது வேட்­பா­ளரை ஆத­ரிக்க தனது கட்­சி­யி­னரை கோரினார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் முழு­மை­யான ஆத­ரவும் பெறப்­பட்­டது. அதேபோல் சந்­திரி கா குமா­ர­துங்க சிறு­பான்மை மக்­களின் பூரண ஆத­ரவை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தினார். 

 மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் நல்­லாட்­சியை தன்னால் ஏற்­ப­டுத்த முடியும் என்ற வாக்­கு­று­தியை சக­ல­ருக்கும் வழங்­கினார். ஆனால் இவர்கள் மூவரும் இன்று தமது கட்சி நல­னுக்­கா­கவும் தனிப்­பட்ட நபர்­களின் நல­னுக்­கா­கவும் நல்­லாட்­சியை கேள்­விக்கு உட்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றனர் என்றார். 

செய்­தி­யாளர் சந்­திப்பில் சமன் ரத்­ன­பி­ரிய கருத்து தெரி­விக்­கையில், நல்­லாட்­சியை நோக்கிய பயணத்தில் சிவில் அமைப்புகள் செய்த பங்களிப்பு மற்றும் மக்களை அரசாங்கதின் பக்கம் திருப்பிய அனைத்தும் இன்று கேள்விக்கு உள்ளாகிவிட்டன. 

நல்லாட்சி புத்தகத்தை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியும் பிரதமரும் படிக்கவேண்டும். அதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. நாம் ஏற்படுத்திய அரசாங்கம் தப்பானதாகிவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். குற்றவாளிகளை காப்பாற்றி அவர்களை அரசியல் ஆசனத்தில் அமரவைக்க ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சித்து வருகின்றனர்.

 ஆகவே இவர்கள் கூறிய நல்லாட்சி இதுவா என்ற கேள்வி இன்று எம்மத்தியில் எழுந்துள்ளது. நாம் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. இவர்கள் மனசாட்சியின் படி செயற்பட வேண்டும். நல்லாட்சியின் பக்கம் இவர்களை திருப்ப எம்மாலான சகல அழுத்தங்களையும் நாம் வழங்குவோம். அதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.   

எமது முடிவு தப்­பா­கி­விட்­டது ; சிவில் அமைப்­புக்கள் சாடல் எமது முடிவு தப்­பா­கி­விட்­டது ; சிவில் அமைப்­புக்கள் சாடல் Reviewed by Madawala News on 10/15/2016 11:30:00 AM Rating: 5