Free Space

நான் தோற்பது உறுதி ! ஆனால் போட்டியிலிருந்து விலக மாட்டேன்


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள பிரபல தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். 

இதனால் அந்த கட்சிக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது. ஆனால் டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் நிறுத்தப்பட்டு உள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த மாதம்(நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களைப் பற்றி டிரம்ப் மோசமாக விமர்சித்ததால் தற்போது சர்ச்சையில் சிக்கிக்கொண்டு இருக்கிறார். 

அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதுதொடர்பாக செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி அமெரிக்கா முழுவதும் வளைத்தளங்களில் வெளியாகி டிரம்புக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய குடியரசு கட்சி தலைமையே டிரம்ப்பின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இதுபற்றி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பிய குடியரசு கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜெப் புஷ், டிரம்ப்பை கண்டிக்கும் விதமாக, “2 பேத்திகளை கொண்டவரான டிரம்ப் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து இருக்கிறார். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்(குடியரசு கட்சி) பால் ரியான் , “டிரம்பின் பழைய பேச்சு என்னை மிகவும் பாதித்து உள்ளது” என்றார்.

ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், “இது மிகவும் பயங்கரமானது. இந்த மனிதர் ஜனாதிபதி ஆகிவிட நாம் அனுமதிக்க கூடாது” என்று கடுமையாக சாடினார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசியது பற்றி டிரம்ப் கூறுகையில், “இது தனிப்பட்ட முறையில் நான் பேசியது ஆகும். ஆனால் என்னை விடவும் பெண்களைப் பற்றி பில்கிளிண்டன்(ஹிலாரியின் கணவர்) மிகவும் ஆபாசமாக பேசி இருக்கிறார். எனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி-டிரம்ப் இடையே இன்று(ஞாயிற்றுக்கிழமை) 2-வது நேருக்கு நேர் விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் டிரம்பு பற்றி வெடித்துள்ள சர்ச்சை அவருக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்ட டிரம்ப், ஊடகங்கள், நிறுவனங்கள் என்னை மோசமான நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகின்றன.

நான் போட்டியில் இருந்து விலகப்போவது கிடையாது, என்னுடைய ஆதரவாளர்கள் தோற்கடிக்கப்பட விடமாட்டேன்,” என்று கூறிஉள்ளார். 
நான் தோற்பது உறுதி ! ஆனால் போட்டியிலிருந்து விலக மாட்டேன் நான் தோற்பது உறுதி ! ஆனால் போட்டியிலிருந்து விலக மாட்டேன் Reviewed by Madawala News on 10/09/2016 01:14:00 PM Rating: 5