Saturday, October 8, 2016

இன்று அன்சில் ஹக்கீம் முறுகல்

Published by Madawala News on Saturday, October 8, 2016  | 

இன்று மு.காவின் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.இதில் கேள்வி கேட்கும் நேரத்தில் மேடைக்குச் சென்ற கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில் தனது வழமையான அதிரடிப்பாணியில் வினாக்களை அள்ளி வீசியுள்ளார்.அவரது வினாக்கள் அங்கு நடந்த சில விடயங்களையும் மு.காவினுள் நிலவும் சில தவறுகளையும் மையப்படுத்தி அமைத்திருந்தன.

இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அங்கு இருக்கவில்லை.இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென நிஸாம் காரியப்பரும் விலகியுள்ளார்.இந்த பிரச்சனைகளை பார்த்த அந் நிகழ்வில் கலந்து கலந்துகொண்டிருந்த மனோ கணேசன் வெளியேறியுள்ளார்.
 
மீண்டும் அந் நிகழ்விற்கு வந்த அமைச்சர் ஹக்கீமிடம் சிலர் அன்சிலை விமர்சித்து தங்களது மூட்டி விடலை மேற்கொண்டுள்ளனர்.மேடையேறிய அமைச்சர் ஹக்கீம் இது சிலரின் சதி எனவும் இவ்வாறானவர்கள் கட்சியை விட்டும் வெளியேறவும் எனக் கூறியுள்ளார்.அமைச்சர் ஹக்கீம் எல்லாவற்றையும் சதி எனக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.முஸ்லிம் காங்கிரஸ் மீது உண்மைப் பற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் அன்சில்.அவரையே வெளியேறுமாறு கூறினால் அஷ்ரபின் இரத்தத்தில் முளைத்த மு.காவிலிருக்க யாருக்குத் தான் தகுதி? அப்படி என்னதான் தகுதி? மேலுள்ளவாறு கூறிய அமைச்சர் ஹக்கீம் அன்சிலிடம் வந்து என்ன நடந்தது? என வினவியுள்ளார்.இது தொடர்பில் என்னிடம் வினவிவிட்டலல்வா என்னை விமர்சித்திருக்க வேண்டும்.இப்போது எதற்கு வருகிறீர்கள் என கேட்டுள்ளார்.இது விடயத்தில் ஒரு தலைவர் எவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டு விடுகிறேன்.
 
அரசியலமைப்பு தொடர்பில் வரையப்பட்டுள்ள வரைபில் நிறைய பிழைகள் காணப்பட்டுள்ளன.இதனை வரைந்தவர்கள் யார்? இதனை உயர் பீடத்திற்கு சமர்பித்தல்லவா இதனை இறுதி வரைபாக முடிவு செய்திருக்க வேண்டும்? இதன் போது நியமிக்கப்பட்ட துணைக்குழு இது தொடர்பில் கவனம் செலுத்தியதா? அவர்கள் யாரிடம் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்கள் என்ற வகையிலேயே அன்சில் தனது கேள்விகளை எழுப்பியுள்ளார்.உண்மையில் இது அன்சில் மாத்திரம் கேட்கும் கேள்விகளல்ல.அங்கிருந்த ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.எந்த வித கலந்துரையாடலுமின்றி அமைச்சர் ஹக்கீம் அமைத்த மு.காவின் யாப்பால் தான் இன்று மு.கா பாரிய பிளவை எதிர்நோக்கியுள்ளமை இங்கு நினைவூட்டத்தக்கது.

இன்னும் இன்னும் தலைவர் மற்றும் அவரின் ஒரு சில ஆதரவாளர்கள் வாசிக்கும் இசைக்கு மு.காவினர் அனைவரும் நடனமாட வேண்டுமென நினைப்பது மு.கா தலைமைத்துவத்தின் சர்வதிகாரப்போக்கை எடுத்துக் காட்டுகிறது.
 
எது எவ்வாறு இருப்பினும் அன்சிலின் துணிவுள்ள இக்கேள்விகளால் அவரது அரசியல் அதிகாரங்கள் எதிர்காலத்தில் கேள்விக்குட்படலாம்.ஒரு உண்மைப் போராளியை ஓரங் கட்டும் நடவடிக்கையில் அமைச்சர் ஹக்கீம் களமிறங்கலாம்.மக்கள் அதன் போது சரியான தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
 
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top