தேசிய நல்லிணக்கத்திற்கான ஹஜ் விளையாட்டு நிகழ்ச்சியும் மற்றும் சிறுவர் தின விழாவும் !


(சஹுfபான் முத்தலி )
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், வர்த்த மற்றும் கைத்தொழில் அமைச்சருமான கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களின்  தலைமையில் நாளைக் காலை (02/10/2016) எட்டு   மணி முதல் மாலை ஆறு மணி வரை அனைத்து இடம்பெறவுள்ளது.

பல வகையான விளையாட்டு நிகழ்ட்சிகளை உள்ளடக்கிய இந்த ஹஜ் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் குருணாகல் வெஹர மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல்வாதிகள் பாடசாலை மாணவர்கள் மூவின மதகுருமார்கள் மற்றும் மூவின மக்களும் கலந்து சிறப்பிப்பதோடு கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களினால் உணவு மற்றும் குளிர்பாணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: 
அஸாருதீன் மொய்னுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் 

குறிப்பு :-அன்றய தினம் (02/10/2016) வருகை தரும் அனைத்து சிறார்களுக்கு கைக்கடிகாரங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும்.
தேசிய நல்லிணக்கத்திற்கான ஹஜ் விளையாட்டு நிகழ்ச்சியும் மற்றும் சிறுவர் தின விழாவும் ! தேசிய நல்லிணக்கத்திற்கான ஹஜ் விளையாட்டு நிகழ்ச்சியும் மற்றும் சிறுவர் தின விழாவும் ! Reviewed by Madawala News on 10/01/2016 03:48:00 PM Rating: 5