Free Space

நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுக்குமாறு கோரி மீனவர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம்.

 

( .எல்..றபீக் பிர்தௌஸ் )

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர்நிந்தவூர்ப் பிரதேசம் வெகுவாகக் கடலரிப்புக்குள்ளாகி, இப்பிரதேசத்திலுள்ள மீனவர்களின்தொழில்களும், அவர்களின் குடியிருப்புக்களும், வாழ்வாதாரங்களும் முற்றாகப்பாதி;க்கப்பட்டுள்ளதனால், இவற்றைத் தடுத்துமக்களைக் காப்பாற்றுமாறு கோரி இன்று (05) நிந்தவூரில் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றுஇடம் பெற்றது.

மட்டுப்படுத்தப்பட்ட  நிந்தவூர்ப் பிரதேச மீனவர்கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டப் பேரணி இன்றுகாலை நிந்தவூர்க் கடற்கரையில் ஆரம்பித்து, கடற்கரை வீதிவழியே  கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியினூடாக நிந்தவூர்ப் பிரதேச செயலகத்தைவந்தடைந்தது.

'நல்லாட்சி அரசே எங்களைக் காப்பாற்று, கடலரிப்பினால் நாமின்று தொழிலை, இருப்புக்களை இழந்துள்ளோம். நாளைமற்றவர்கள் இழப்புக்களைச் சந்திக்கலாம்.அதற்கு முன்னர் எங்களைக் காப்பாற்றுங்கள்,சரியாகத்திட்டமிடப்படாத ஒலுவில்துறைமுகத்தால் ஒலுவில் மக்களும் தொழிலை, இருப்புக்களை இழந்துள்ளனர், இன்று நிந்தவூர்ப்பிரதேச மக்கள் இழப்புக்களால்துன்புறுகின்றனர், நாளை காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை என்றுநீண்டு செல்லலாம். இதற்கிடையில்கடலரிப்பைத் தடுத்து நிறுத்து, ஒலுவில்துறைமுகத்தால் நாம் அழிகிறோம்.துறைமுகத்தை நிறுத்து! இல்லையேல்கடலுக்குள் போடப்பட்ட கற்களை மீண்டும்அகற்று!, நல்லாட்சி அரசின் நாயகர்களானமதிப்புக்குரிய மைத்திரியே, மதிப்புக்குரியரணிலே எங்களைக் கடலிடமிருந்துகாப்பாற்றுங்கள்! , இன்று இந்த ஏழைமீனவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர்மட்டும்தான். அந்த உயிரையும் கடலிடமிருந்துகாப்பாற்றுங்கள்' போன்ற வாசங்கள் கொண்டசுலோகங்களைச் சுமந்தவர்களாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் உரத்த குரலில்கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மீனவர்களால்பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மாஜலீலிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வுகள் அனைத்திலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்கலந்து கொண்டு, மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கினார் என்றுஎமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுக்குமாறு கோரி மீனவர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம். நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுக்குமாறு கோரி மீனவர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on 10/06/2016 08:05:00 AM Rating: 5