Ad Space Available here

நவீனத்துவ சாதணங்கள் காரணமாக இலக்கிய ஆக்கங்கள் மலிந்து விட்ட ஒரு காலம்..


(வத்துகாமம் நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்)
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் இலக்கிய ஆக்கங்கள் அச்சுருவில்தான் வரவேண்டும் என்ற ஒரு நியதி இல்லை.

அதே நேரம் நவீனத்துவ சாதணங்கள் காரணமாக இலக்கிய ஆக்கங்கள் மலிந்து விட்ட ஒரு காலம் என்றும் கூற முடியும் என நீர்வழங்கள் நகர நிர்மாணத்துறை அமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.

உடதலவின்னை சிந்தனை வட்டத்தின் 355 வது நூலாக வெளியிடப்பட்ட  உடதலவின்னையைச் சேர்ந்த செல்வி முபஸ்ஸரா நவ்பரின் 'எனது கவிதைக்கு மனசென்று பெயர்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஒருகாலம் இருந்தது ஆக்கங்கள் அச்சுவாகனம் ஏற்றி அழகு பார்க்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது. இன்று நவீன யுகத்தில் கையில் ஒரு ஸ்மார்ட் போனை மட்டும் வைத்துக் கொண்டு எத்தனையோ இலக்கிய சாசகசங்கள் புரிய முடியும். அந்த வகையில் இன்று ஆக்கங்கள் மலிந்து போன ஒரு காலம் என்று கூடக் கூறலாம்.

அதேநேரம் பெரிய பணச் செலவு செய்து நூலுருவாக்காது சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தமது சிந்தனைகளை வெளிக்கொணர முடியும். அனால் அனேகர் முகநூல்கள் மூலமும் இணையங்கள் மூலமும் ஆக்கங்களை உருவாக்கி பகிரும் அதேநேரம் கவலை தரும் விடயங்களும் இடம் பெறுகின்றன.

இணையங்களையும் அதன் சுயாதீனத்தையும் கட்டுப் படுத்த முடியாது என்பது சர்வதேச நியதியாக இருப்பினும் சிலர் கையாள்கின்ற வசன நடை அல்லது பாவிக்கும் சொற்பிரயோகம் சில வேளைகளில் அவை அனாகரிகமானதாக உள்ளன. அவ்வாறு அநாகரிகமான விடயங்கள் தொடர்பாக  சட்டத்தாலோ வழக்குகள் தாக்கள்செய்தோ முடிவு காண முடியாதவைகளாக அவை உள்ளன. அவ்வாறான வற்றை முகாமை செய்வதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியாதுள்ளது.

சீனா தேசமானது முகநூலுக்கு தடை விதிக்க முற்பட்ட போது அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. எனவே சுய கட்டுப்பாடு என்ற ஒன்றை நாம் தெரிவு செய்தாலும் அது மிகச் சிரமமான விடயமாகும். இப்படி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சமூக கட்டுக்கோப்பு தகராது விழுமியங்களைக் கொண்ட ஒழுக்கமுள்ள ஆக்கங்களை சிலர் வெளியிடுவது வரவேற்கத் தக்கது.

இன்று இலக்கிய விழாக்கள் என்றால் ஆட்களைத் திரட்டுவது மிகச் சிரமமான காரியம். தலைநகரில் ஒரு இலக்கிய விழா என்றால் 25 அல்லது 30 பேராவது கூடுவது அபூர்வமாகும். யந்திர மயமான கொழும்பு வாழ்க்கையில் ஓய்வு உளைச்சலைக்காண முடியாதுள்ளது. ஆனால் கிராமப்புறங்களின் நிலைமை அப்படியல்ல. பொதுவாக உடதலவின்னையில் என்ன விழாக்கள் நடந்தாலும் பெரிய கூட்டத்தை நான் அவதானித்துள்ளேன். அந்த அடிப்படையில் இன்று மண்டபம் வழிந்தோடும் சனக் கூட்டத்தைக் காணமுடிந்தது. இது இளம் படைப்பாளிகளுக்கு ஒரு உந்து சக்தியாகும் எள்றார்.

இவ்வைபவத்தில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துறை விரிவுரையாளர் திருமதி லரீனா ஹக் நூலாய்வு செய்து உரையாற்றினார். 

அவர் தமதுரையில் கூறியதாவது-
ஊடதலவின்னையில் சிந்தனை வட்டம் என்ற ஒரு அமைப்பு 355 வெளியீடகளை கொண்டுவந்து எம்முன் வைத்தது என்றால் அதுஇமாலயச் சாதனையாகும். இலங்கையில் வேரெங்கும் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம் பெற முடியாது. கல்வியில் அல்லது வாசிப்பில் முன்னிலை வகிக்கும் யாழ்பாணம் போன்ற .டங்களுக்குக் கூட இது இரண்டாவதாக மடியாது. எனவே உடதலவின்னை மண்ணை சின்ன யாழ்ப்பாணம் என்று கூறினாலும் மிகையாகாது.

அதேநேரம் இங்குள்ள ஆக்கங்களுக்கு வித்திட்டது உடதலவின்னை சிந்தனை வட்டமாகும். சிந்தனை வட்டத்தின் ஸ்தாபகர் காலம் சென்ற புன்யாமீன் அவர்களை நாம் எனிதில் மறந்து விட முடியாது. அவரது சிந்தனை தான் இதற்குக் காரணமாகும் என்றார்.
இவ்வைபவத்தில் சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கலாபூசணம் புன்யாமீன் தொடாபான நினைவுப் பேருரை ஒன்றையும் நிகழ்த்தினார்.

மடவளை சியாம் எம். அன்சார் கவிவாழ்த்துப் பாடினார்.
 
 
நவீனத்துவ சாதணங்கள் காரணமாக இலக்கிய ஆக்கங்கள் மலிந்து விட்ட ஒரு காலம்.. நவீனத்துவ சாதணங்கள் காரணமாக இலக்கிய ஆக்கங்கள் மலிந்து விட்ட ஒரு காலம்.. Reviewed by Madawala News on 10/02/2016 07:25:00 AM Rating: 5