Sunday, October 2, 2016

மாற்றங்களுக்கான சிந்தனை மலருமா?

Published by Madawala News on Sunday, October 2, 2016  | மாற்றம் இன்று எல்லாவற்றிலும் தேiவாயகவே உள்ளது. நமது நடத்தைகள், மனப்பாங்குகள், வாழ்க்கை முறைகள் என அத்தனை விடயங்களிலும் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்படும்வதும் ஏற்படுத்தப்படுவதும் ஒரு ருசிகரமானதாகவே அமையும். மாற்றமில்லாத வாழ்க்கை மலர்ச்சியில்லாமலே போய்விடும். வாழ்க்கையை இன்பகரமானதாக மாற்ற வேண்டுமானால் நாம் மாற்றங்களுக்காக மாற வேண்டும். நாமும் நமது சூழலும் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும்.
 
அந்த நகருதலுக்கான நாளாக ஒவ்வொரு சமூகத்தினரும் தத்ததமது புது வருடப்பிறப்புக்களை பயன்படுத்துகின்றனர். ஓவ்வொரு சமூகத்திற்கும் ஒரு நாள் அவர்களின் புதுவருட தொடக்க நாளாகா அமைகிறது. அந்தவகையில் உலகில் வாழும் இஸ்லாமியர்களின் புதுவருடமான ஹிஜிரி 1438ஆம் வருடமும் மலர்ந்துள்ளது.  
 
நாட்களின் சூழற்சியால் மாதங்கள் தோன்றுகின்றன. மாதங்கள் சுழன்று வருடங்கள் மலர்கின்றன.  ஒவ்வொரு வருடமும் 12 மாதங்களைக் கொண்டவை. இதில் சகல மதத்தினரும் ஒருமித்த கருத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
 
பரந்து விரிந்த பூமியில் வாழும் வௌ;வேறுபட்ட நாட்டினர், மதத்தினர், இனத்தினர் கால நேரத்தைக் கணக்கிடுவதற்கு வௌ;வேறு  முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். சிலர் சூரியனையும் சிலர் சந்திரனையும் அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டு வருகின்றனர்.
 
உலகில் வாழும் முஸ்லிம்கள் சந்திரனின் சுழற்சியைக் கொண்டே இஸ்லாமிய மாதத்தைக் கணக்கிட்டு வருகின்றனர். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கா நகரை விட்டு  மதினா நகருக்கு (ஹிஜ்ரத்) சென்ற வராலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் இஸ்லாமிய வருடக் கணக்கு கணிப்பிடப்படுகிறது. இது ஹிஜ்ரி வருடம் என அழைக்கப்படுகிறது.
 
இஸ்லாம் மார்க்கத்தோடும் இஸ்லாமியரோடும் சம்பந்தப்பட்ட அநேக விடயங்கள் பிறைக் கணக்கெடுப்பை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோன்பு, ஹஜ் வணக்கங்களின் ஆரம்பம், பெருநாள் தின நிர்ணயிப்பு. ஸக்காத் ஏழை வரி கொடுப்பதற்கான காலம், கணவன் இறந்த அல்லது பிரிந்ததற்காக மனைவி  அனுஷ்டிக்க வேண்டிய 'இத்தா'வுக்குரிய நாட்கள், திருமணத்திற்கான நாட்கள் போன்ற பலவற்றுக்கு பிறைக்கணக்கெடுப்பானது முக்கியம் பெறுகிறது. இதில் இலங்கை வாழ் சர்வதேச பிறையாளர்கள் நோன்பை அடைதிலும்  பெருநாட்களைக் கொண்டாடுவதிலும் முரண்பட்டுக்கொள்வதையும் வருடாவருடம் காண்கின்றோம்.
 
பிறையின் முக்கியத்துவம் தொடர்பாக புனித குர்ஆனின் ஸூறா பகராவில் கீழ்வருமாறு தெளிவுபடுத்தப்படுகிறது. ' (நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் (அதற்கு) அவை மனிதர்களுக்கும், ஹஜ்ஜு(வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை' எனக் கூறுவீராக.
 
மேலும், 'வானங்களையும் பூமியையும்  படைத்த நாளில் (இருந்து மறுமை நாள் வரை நடந்தேறும் அனைத்து விஷங்களும் எழுதப்பட்ட) அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்குப்) பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும்' என அல்குர்ஆனின் ஸூறா தௌபாவில்  அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
 
அப்புனித மிக்க நான்கு மாதங்கள் துல்கஃதா, ரஜப், துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவை என நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள் ;(ஆதாரம்: புஹாரி, அஹ்மத்)
 
இம்மாதங்களில் போர் புரிவது விலக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விரோதிகள் நம்முடன் வலிய சண்டைக்கு வந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள போரிடலாம் என்பதை இஸ்லாம் கற்றுத் தருவதையும் நாம் அறிவோம். இதன் மூலம் மனித சமூதாயத்தில் சண்டை சச்சரவு இல்லாத ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவது இம்மாதத்தில் முஸ்லிம்களின் கடமையாகிறது.
 
இது அல்லாஹ் தனது திருமறை மூலம் நமக்கிடும கட்டளையாகும். இக்கட்டளையைச் சரிவர நிறைவேற்றும்போது சமூகத்திற்கிடையே மட்டுமல்ல நாட்டிலும் முழு உலகிலும் முஸ்லிம்களால் அமைதி ஏற்படும்.
 
ஆனால், துரஷ்டவசமான விடயம் என்னவெனில,; இன்று முழு உலகிலும் யுத்தம் நடக்கின்ற, சண்டை சச்சரவு நிறைந்த நாடுகளாக முஸ்லிம் நாடுகள் காணப்படுகின்றன. இறைகட்டளையின் பிரகாரமும் நபி வழியிலும் வாழ்ந்து அமைதி, பொறுமை விட்டுக் கொடுப்பு என்பவற்றின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இந்த முஸ்லிம் சமூகத்தின் சில கூட்;டங்கள்; பல்வேறு அற்ப விடயங்களுக்காக இப்புனித மாதங்களிலும் தங்களைத் தாங்களாகவே அழித்துக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
 
இஸ்லாமிய சமூகத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அழித்தொழிக்கும் செற்பாட்டில் இறங்கி அவர்களின் இலக்கை நோக்கி உலகளாவிய ரீதியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
இலங்கையிலும்  அத்தகையதொரு நிலை, அரசியல் ரீதியிலும் வேறு வழியிலும் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே பகைமையை உருவாக்கி, ஒற்றுமையைச் சீர்குலைத்து அதன் ஊடாக இஸ்லாத்தைக் கேவலப்படுத்தவும் முஸ்லிம்களை தங்களுக்குள் தங்களை எதிரிகளாக நோக்கவும் முஸ்லிம்களின் மார்க்க விடயங்களைக் கேவலப்படுத்தும் மற்றும்  கொச்சைப்படுத்தும்; கைங்கரியத்திலும் அண்மைக்காலமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
 
இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம்கள் இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1438ஆம் வருடத்தில் காலடிவைத்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் நமது மார்க்கத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற சுய விசாரணையை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது மார்க்கத்தில் நாம் இருக்கும் நிலையை அறிந்துகொள்ள முடியுமாக அமையும். நம்மை நாம் நல்வழிப்படுத்திக் கொள்ள சுயவிசாரணைகள் துணைபுரியும்.
 
நாம் நமது மார்க்கம் காட்டித்தரும் வழிகளிலிருந்து விலகி நடக்கின்றபோது, நமது செயற்பாடுகள் மார்க்கத்திற்கு முரணாக அமைகின்றபோது அதனால் மலினப்படுத்தப்படுவது நாம் மாத்திரமல்ல நாமும் நமது சமூகமும் மார்க்கமுமாகும் என்ற சிந்தனை நம்மில் உருவாக வேண்டியுள்ளது. அச்சிந்தனைக்கான மாற்றம் இந்த இஸ்லாமிய புதுவருடத்தில் உருவாகுவது நம்மை இழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
 
ஆனால், துரஷ்ட வசம் என்னவில், முஸ்லிம்களில்; சிலருக்கு  இஸ்லாமி புதுவருடம் எப்போது பிறக்கிறது என்று கூடத் தெரியாதவர்களாகவும், இஸ்லாமிய வருடத்தின் 12 மாதங்களையும் ஒழுக்குமுறையாக சொல்லாத் தெரியாதவர்களாகவும், எந்த மாதத்தின் பின்னர் எந்த மாதம் உள்ளது என்பதைக் கூட அறியாதவர்களாவும் முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு உலா வருவது கவலையளிக்கும் விடயமாகும்.
 
இறை கட்டளையும் நபி வழியையும் பின்பற்றி அதன்பிரகாரம் நமது அத்தனை விடயங்களையும் நிறைவேற்றி வாழ வேண்டிய நாம், நம்மை நாமே நமது செயற்பாடுகளினால் கேவலப்படுத்திக்கொண்டு பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் விடுகின்ற தவறுகளே நம்மை ஏனைய சமூகத்தின் மத்தியில் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
 
ஆண்மீகக் கொள்கைகளை வளர்ப்பதற்காகவும், அரசியல் கட்சிகளை வளர்த்தெடுப்பதற்காகவும் உழைக்கும் நாம், நமது இளைஞர் சமூகமும் வளரும் சிறுவர்களும் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவறான பாதைகள் முஸ்லிம் சமூகத்தை எங்கே கொண்டு சேர்க்கும் என்று சிந்தித்து செயற்படுவதற்கு தயாரில்லை. அவ்வாறு செயற்பட்டாலும் அவை தொடராக இடம்பெறுவதில்லை. இதுதான் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய  நிலை என்று கூறுவதில் தவறேதும் இருக்காது.
 
அந்தவையில், உதயமாகியுள்ள இஸ்லாமிய புதுவருடத்;தில் புதிய சிந்தனைகளினூடான மாற்றங்கள் நமது சமூகத்திலும் தனி வாழ்விலும் ஏற்பட வேண்டும். அதற்கான பயணங்கள் தொடங்கப்பட வேண்டும். நமது ஒவ்வொரு விடயத்திலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று நமது தனித்துவம் பேணப்பட வேண்டும். அதன் மூலம் நாம் நம்மைப் கௌரவப்படுத்தியவர்களாக மலினப்படுத்தப்படாமல் சகோதர சமூகங்களோடு வாழ முடியும்.
 
மாறாக, அரசியல் என்றும் ஆண்மீகக் கொள்கைள் என்றும் வியாபாரம் என்றும் பதவி பட்டங்கள் என்றும் ஊர்; என்றும் பிரதேசம் என்றும் நமக்குள் நாம் போட்டி போட்டு ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வாழ்வதனால் நம்மால் எதையும் சாதித்துவிட முடியாது. அவை நம்மை, நமது ஒற்றுமையை பலவீனப்படுத்தும்
 
சொற்ப நலன்களுக்காக தனித்துவத்தை தாரைவார்த்து ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கின்றபோது அதனால் பாதிக்கப்படுவது சமகால முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல எதிர்கால நமது சந்ததியினரும்தான்.
 
நமது கனவுகளும் ஆசைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக எதைவிற்றாவது அவற்றை அடையவேண்டும் என்ற சிந்தனை நம்மிலிருந்து மாற வேண்டியுள்ளது. நமது கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேறுவதற்காக நாம் உழைப்பது தவறல்ல. ஆனால் அவை, சமூகத்தைக் காட்டிக்கொடுக்காது, தனித்துவத்தை இழக்காது, உரிமைகளை விட்டுக்கொடுக்காது. நிறைவேற்றப்படுதாக இருக்க வேண்டும். இந்த புதுவருடத்தின் புதிய சிந்தனைகளாக அவை அமைய வேண்டும்.
 
மாறாக சொற்ப நலன்களுக்காக சமூகம் காட்டிக்கொடுக்கப்படுகின்றபோது அதன் பாதிப்பு முழுச் சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினரதும் இருப்பையும் இறைமையையும் பாதிக்கும் என்பதை மனதில் நிறுத்தி, புதிய ஆண்டியில் புதிய சிந்தனைகளோடு மாற்றங்களை நோக்கி பயணிக்க இறைவனைப் பிறார்த்திப்போமாக.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top