Free Space

அலுத்கம பேருவளை கலவரங்களின் பின்னணியில் நல்லாட்சி அமைச்சர் ?


(கா. சந்­திரன்)

பேரு­வளை நகரில் இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரத்­துக்கு கார­ண­மாக இருந்த சிலர் இன்று நல்­லாட்­சியில் முக்­கிய அமைச்சு பத­வி­களில் உள்­ளனர். 


இவர்­க­ளது இன வாத செயற்­பா­டு­க­ளையும் இவர்­க­ளது பெயர்­க­ளையும் மிக விரைவில் ஆதார்ங்களுடன் வெளிப்­ப­டுத்­துவோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பியல் நிஷாந்த தெரி­வித்தார். 


வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டுகள் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் இன­வாத செயற்­பா­டு­களை மீண்டும் நினை­வுக்கு கொண்டு வரு­வதை போல அமைந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்டிக் காட்­டினார்.


பத்­த­ர­முல்லையில் அமைந்­துள்ள மஹிந்த ராஜ்­ப­க் ஷவின் காரி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,


பேரு­வளை இனக்­க­ல­வ­ரத்­துக்கு கார­ண­மாக இருந்த சிலர் நல்­லாட்­சியில் முக்­கிய அமைச்­சர்­க­ளாக இன்று உள்ளனர். இவர்­க­ளது குற்­றங்­களை மறைத்து, குற்­ற­வா­ளி­க­ளாக இருக்க வேண்­டி­ய­வர்­களை நல்­லாட்சி அர­சாங்கம் அமைச்சுப் பத­வி­களில் அமர்த்தி அழகு பார்த்து வரு­கின்­றது.


இந்த எதேச்­ச­தி­கார போக்­குக்கு எதி­ராக நாம் எதிர்­வ­ரு­கின்ற காலங்­களில் போரா­டு­வோம். அது­போல மிக விரைவில் பேரு­வளை இனக்­க­ல­வ­ரத்­துக்கு சூத்­தி­ர­தா­ரி­க­ளாக செயற்­பட்­டவர்­க­ளையும் அவர்­க­ளது பெயர்­க­ளையும் வெளிப்­ப­டுத்­துவோம். இதன் மூல­ம் யார் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் என்­பதை மக்கள் புரிந்­து­கொள்வார். 


வட மாகாண முத­ல­மைச்சர் சி. வி. விக்­கி­னேஸ்­வரன் கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் முன்னெடுத்த இன­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் இன­வாத செயற்­பா­டு­களை மீண்டும் நினை­வூட்டுகிறது.


நாட்டில் கடந்த 30 வருட கால­மாக நில­விய யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்து வடக்கு மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தை பெற்றுக் கொடுத்­தது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மட்­டுமே ஆவார். குறிப்­பாக வட மாகாண முத­லமைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் வடக்கில் புத்தர் சிலை­களை அகற்­று­மாறும், வடக்கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை உட­ன­டி­யாக அகன்று செல்­லு­மாறும் கோரிக்கை விடுக்­கிறார். இது பார­தூ­ர­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக உருவெடுத்திருக்கின்றது. 


மீண்டும் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கு இது சாதகமாக அமைந்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் நல்லாட்சி அரசாங்கம் விக்கினேஸ்வரனுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

அலுத்கம பேருவளை கலவரங்களின் பின்னணியில் நல்லாட்சி அமைச்சர் ? அலுத்கம பேருவளை கலவரங்களின் பின்னணியில் நல்லாட்சி அமைச்சர் ? Reviewed by Madawala News on 10/01/2016 09:45:00 AM Rating: 5