Free Space

ஓங்குகிறது மஹிந்தவின் கை ! பல கூட்டுறவு சங்க தேர்தல்களில் மஹிந்தவுக்கு அருதிப்பெரும்பான்மை ....


கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் நாடு தழுவிய ரீதியில் சங்கங்களில் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது இடம்பெற்றுள்ள கூட்டுறவு சங்க தேர்தல்களின் கூட்டு எதிர்கட்சியின் கை ஓங்கிவதை அவதானிக்க முடிகிறது.

நேற்று இடம்பெற்ற குருநாகல் மாவட்ட கொபேகன கூட்டுறவு சங்க தேர்தலில் கூட்டு எதிர்கட்சி 82 உறுப்பினர்களையும் ஐக்கியதேசிய கட்சி 14 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இது தவிர புத்தளம் ஆரச்சிகட்டுவ கூட்டுறவு சங்கம், கம்பளை ஆகிய கூட்டுறவு சங்க தேர்தல்களில் கூட்டு எதிர்கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி ஈட்டி வருகிறது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் குளியாபிடிய தேர்தல் தொகுதியில் இரு வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றுள்ள போது அந்த வாக்கெடுப்பில் குளறுபடி இடம்பெற்றுள்ளதாக கூட்டு எதிர்கட்சி நீதிமன்றம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூட்சி மன்றங்களை தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தல்கள் முக்கியத்துவம் பெறும் நிலையில் அது இதர தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தேர்தல் என கருதபடுவது குறிப்பிடத்தக்கது .
ஓங்குகிறது மஹிந்தவின் கை ! பல கூட்டுறவு சங்க தேர்தல்களில் மஹிந்தவுக்கு அருதிப்பெரும்பான்மை .... ஓங்குகிறது மஹிந்தவின் கை ! பல கூட்டுறவு சங்க தேர்தல்களில் மஹிந்தவுக்கு அருதிப்பெரும்பான்மை .... Reviewed by Madawala News on 10/08/2016 12:38:00 PM Rating: 5