Kidny

Kidny

விளம்பரங்களுக்காகவே சிலர் சாய்ந்தமருதுக்கு நகரசபை என்ற கோரிக்கையை முன்வைத்தனர் : அமைச்சர் பைசர் முஸ்தபா


- எம்.வை.அமீர், சுஹைப் எம்.காசீம்,யு.கே.காலித்தீன் -

வெறுமனே புகைப்படங்களுக்காகவும்பத்திரிகை விளம்பரங்களுக்காகவுமே நகரசபைக் கோரிக்கையை சிலர் என்னிடம் முன்வைத்தனர் ஆனால் அமைச்சர் றிசாத் பதியூதீன்னும் கலாநிதி ஏ.எம்.ஜெமீலும் மட்டுமே உங்களது நியாயமான கோரிக்கையை இதயசுத்தியுடன் முன்வைத்தனர் சாய்ந்தமருது மக்களில் கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று இந்தமண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சிமாகாண சபைகள் அமைச்சர்பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை சாய்ந்தமருதுவில்அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து கடந்த (21/10/2016)  அன்று திறந்துவைத்த பின்னர் இடம்பெற்றபொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது இந்த உறுதிமொழியை வழங்கினார்.

கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து உரையாற்றுகையில்,

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கை இனி நிறைவேறப் போகின்றது. இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சகோதரர் ஜெமீல் ஆகியோர்என்னிடம் நீண்டகாலம் வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது உங்களுக்குக் கிடைத்துவிட்டது.

இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை ஒன்று வேண்டுமென என்னிடம் வேறுசில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்தபோதும்அவர்கள் இதயசுத்தியாக இந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். வெறுமனே புகைப்படங்களுக்காகவும்பத்திரிகைவிளம்பரங்களுக்காவுமே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். 

ஆனால்அமைச்சர் றிசாத்தைப் பொறுத்தவரையில் உங்களின் பிரச்சனைகளை இனங்கண்டுஇதயசுத்தியோடு இந்த முயற்சியில் இறங்கினார் என்பதை பகிரங்கமாகக் கூறுகின்றேன்.

மர்ஹூம் அஷ்ரப் மறைந்த பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பற்றுமிக்க தலைவனாக அவரை நான் இனங்கண்டுள்ளேன். 

கிரேன்ட்பாசிலும்பேருவளையிலும் முஸ்லிம்களின் மீதும்பள்ளிகளின் மீதும் கொடூரங்கள் இழைக்கப்பட்டபோது நானும்அமைச்சர் றிசாத் அவர்களும் மட்டுமே மக்களோடு மக்காளாக களத்தில்நின்று துணிந்து போராடியவர்கள். 

அமைச்சர் றிசாத் ஒரு சமூகப் பற்றாளர்.சமூகத்துக்காக துணிந்து குரல் கொடுப்பவர். விளம்பரங்களுக்காவோபகட்டுகளுக்காகவோ அவர் பணிபுரிபவர் அல்ல. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கின்ற போதும்சமூகத்துக்காக பாடுபடும் அமைச்சர் றிசாத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. அவரை பலப்படுத்தவேண்டிய தேவையும் நமக்கு இருக்கின்றது.

நான் கண்டி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதுமாற்றுக் கட்சிக்காரன் என்று பாராமல் சமூகத்தின் நன்மைக்காகஎன்னை வெற்றியடையச் செய்வதற்காக அந்த மாவட்டத்துக்கு வந்துஎனது வெற்றிக்காக அவர் உழைத்தமையைநான் நன்றியுணர்வுடன் இங்கு கூற விரும்புகின்றேன் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன், அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவர் கலாநிதி ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், கணிமக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான  மஜீத்,லங்கா அசோக் லீலன்ட் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, கட்சியின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் எஸ்.எம்.கலீல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் அன்வர், மற்றும் இபத்துள் கரீம் ஆகியோரும் உரையாற்றியதுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

அமைச்சர்கள் மற்றும் அதிதிகளின் உரைகளின் முழுவடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது

 

 

 

அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உரை 

http://vocaroo.com/i/s1Aia5FsNkgK

அமைச்சர் றிசாத் பதியுதீனின் உரை 

http://vocaroo.com/i/s19iGmxALQAt

கலாநிதி ஏ.எம்.ஜெமீல் உரை 

http://vocaroo.com/i/s1iqDKa814Rn

கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் உரை 

http://vocaroo.com/i/s1Xd2XGiD6vR

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் உரை 

http://vocaroo.com/i/s1xjFzFHPfwv

மறுமலர்ச்சி அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.கலீல் உரை 

http://vocaroo.com/i/s1Fhg530I9cC

அமைச்சர் றிஸாத் பதியுதீன் தனது உரையில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை வழங்கப்படும் அதேவேளை கல்முனை மக்களுக்கு எவ்வித அநீதியும் இளைக்கப்படமாட்டாது என்றும் அவர்களை அவர்களே ஆளும் நிலை தோற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விளம்பரங்களுக்காகவே சிலர் சாய்ந்தமருதுக்கு நகரசபை என்ற கோரிக்கையை முன்வைத்தனர் : அமைச்சர் பைசர் முஸ்தபா விளம்பரங்களுக்காகவே சிலர் சாய்ந்தமருதுக்கு நகரசபை என்ற  கோரிக்கையை முன்வைத்தனர் : அமைச்சர் பைசர் முஸ்தபா Reviewed by Madawala News on 10/22/2016 12:06:00 PM Rating: 5