Free Space

காரைதீவில் தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்கு..

 
(ஏ.எல்.நிப்றாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வழிகாட்டல் இலவச கருத்தரங்கு காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூரில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகம் அறிவித்துள்ளது.
மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ. வினோதராஜாவின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கருத்தரங்கில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்துவிட்டு, தொழிலை எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவதிகள் எல்லோரும் கலந்துகொண்டு தொழிற் பயிற்சி துறைசார் கற்கைகள் மற்றும் எதிர்கால தொழில்வாய்ப்பு பற்றிய விடயங்களில் தெளிவுபெற முடியும்.
இதேவேளை, இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மட்டுமன்றி பிரதேசவாசிகளும் காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள  பயிற்சிக் கூடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.மஹ்சூன் தெரிவித்தார்.
காரைதீவில் தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்கு.. காரைதீவில் தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்கு.. Reviewed by Madawala News on 10/26/2016 02:34:00 PM Rating: 5