வசீம் தாஜுதீனின் உடற்கூறுகளை எடுத்து சென்றவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ?


உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுகின்ற போது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் பல்கலைகழக மாணவர்கள் கைது செய்வது தொடர்பில் பல்கலைகழக மாணவர்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

கல்கமுவ பொலிஸார் 10 பல்கலைகழக மாணவர்களை நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியமைக்காக கைது செய்துள்ளதாக இதற்கு காரணம் கூறியுள்ளனர்.

அண்மைக்காலங்களில் பொலிஸார் கைது செய்தவர்கள் பலர் பொலிஸாரால் தக்குதலுக்கி உள்ளாகி இறந்துள்ளனர் எனவே நாம் எமது அடையாள ஆவணங்களை பொலிஸுக்கு வழங்க மறுப்பு தெரிவிக்கிறோம்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் கைரேகை சிகையின் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை பொலிஸார் பெற்றுள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் வைத்திய சாலைக்கும் எதிர்ப்பு வெளியிடுது சட்டசிரோத செயல் என அரசு கூறுகிறதா?

கடந்த வாரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் சைடம் மருத்துவ கல்லூரியில் இருந்து தாஜுதீனின் உடற்கூறுகள் என்ற சந்தேகத்தில் 26 உடற்கூறுகளை எடுத்து சென்றனர். இதனை அங்கு எடுத்து சென்ற அர்சாங்க வைத்திய அதிகாரி இதுவரை கைது செய்யப்படாமல் சுதந்திரமாக உள்ளனர்.என குறிப்பிட்டார்.
வசீம் தாஜுதீனின் உடற்கூறுகளை எடுத்து சென்றவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? வசீம் தாஜுதீனின் உடற்கூறுகளை எடுத்து சென்றவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? Reviewed by Madawala News on 10/10/2016 11:52:00 PM Rating: 5