Accaddemy

மாளிகாவத்தை மையவாடி காணி விவகாரம் : சட்டம் நிலைநாட்டப்படுமா?


-ARA FAREEL -
நாட்டின் தலை­நகர் கொழும்பில் முஸ்­லிம்­களின் மைய­வாடிக் காணி அப­க­ரிக்­கப்­பட்டு எட்டு மாடிக் கட்­ட­ட­மொன்று உயர்ந்து நிற்­கி­றது. இந்த மைய­வாடி காணியை பெரும்­பான்மை சமூ­கத்­தவர் ஒரு­வ­ருக்கு தாரை­வார்த்­து­விட்ட கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் முன்னாள் நிர்­வா­கிகள் இன்று வாய் பேசாத மௌனி­க­ளாக இருக்­கி­றார்கள்.

மைய­வாடி காணியை அப­க­ரித்து அக்­கா­ணியில் சட்­ட­வி­ரோ­த­மாக மாடிக் கட்­ட­ட­மொன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்கு பெரும்­பான்மை சமூ­கத்­த­வ­ருக்கு அர­சியல் செல்­வாக்கு பின்­ன­ணியில் இருந்­தி­ருக்­கி­றது.

கடந்த கால மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோத­பாய ராஜபக் ஷவின் நண்பர் உபாலி ஜயசிங்கவே இந்த கட்டடத்துக்கு உரிமையாளர். 

இந்த சட்­ட­வி­ரோத கட்­ட­டத்­துக்கு எதி­ராக முன்னாள் மேயர் முஸம்­மிலின் பத­விக்­கா­லத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு அவ­ரது பத­விக்­கா­லத்தின் பின்பு நிய­மிக்­கப்­பட்ட மாந­கர ஆணை­யா­ள­ரினால் வாபஸ் பெறப்­பட்­டமை தொடர்­பாக இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் முறை­யிட்­ட­தை­ய­டுத்து அவர் மாந­கர சபை ஆணை­யாளர் வி.கே அநு­ர­வையும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்க பிர­தி­நி­தி­க­ளையும் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைத்­துள்ளார். 

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்க பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் அண்மையில் அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்­பெற்­றது. 

குறிப்­பிட்ட வழக்கு மேல் மாகாண முத­ல­மைச்­சரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே வாபஸ் பெறப்­பட்­ட­தாக கொழும்பு மாந­கர ஆணை­யாளர் தெரி­வித்­த­தாக இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் தெரி­வித்துள்ளார். 

இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மையும் அமைச்சில் சந்­தித்து மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியில் சட்ட விரோ­த­மாக பெரும்­பான்மை சமூ­கத்­த­வ­ரான உபாலி ஜய­சிங்­க­வினால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் கட்­டடம் தொடர்பில் முறைப்­பாடு செய்­தனர். 

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது ‘அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் மேற்­கொள்ள வேண்­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் இதற்கு எதி­ராக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மூலம் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். 

பிர­தமர் ரணி­லுக்கு கடிதம் 
மாளி­கா­வத்தை மைய­வா­டிக்­காணி கடந்த காலத்தில் தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு கட்­டடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் கட்­ட­டத்­துக்குச் சொந்­தக்­காரர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவின் நண்பர் என்­பதால் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்­லை­யெ­னவும் தற்­போ­தைய நல்­லாட்சி அரசில் நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்­ப­டியும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பிர­த­ம­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தது. 

சங்­கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்கப் பட்­டுள்­ள­தா­வது, மைய­வாடி காணியை அப­க­ரித்து சட்ட விரோ­த­மாக கட்­ட­ட­மொன்­றினை நிர்­மா­ணித்து வரும் உபாலி ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து தடுக்க முயற்­சித்த போதும் முடி­யாமற் போனது. அவர் அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ளரின் நண்­ப­ராக இருந்­ததே இதற்குக் கார­ண­மாகும்.

வழங்­கப்­பட்­டி­ருந்த கட்­டட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் 2013 ஆம் ஆண்டு காலா­வ­தி­யாகி விட்­டது. அனு­ம­திப்­பத்­திரம் புதுப்­பிக்­கப்­ப­டாது தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை கட்­டட நிர்­மாணப் பணிகள் தொடர்ந்­தன. இதற்கு எதி­ராக நாம் பல எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும் மாந­கர சபை அதி­கா­ரிகள், மாளி­கா­வத்தை பொலிஸ் சுற்­றாடல் பிரிவு இத­னைக்­கண்டு கொள்­ள­வில்லை. இதற்குக் காரணம் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையே எனக்­க­ரு­து­கிறோம். 

2016 ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணி சட்­ட­வி­ரோத கட்­டடம் தொடர்­பாக கொழும்பு மேய­ரிடம் பல­கட்ட பேச்சு வார்த்­தை­களை நடத்­தினோம். 

இத­னை­ய­டுத்து கொழும்பு மாந­கர சபை சட்­ட­வி­ரோத கட்­டட நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தும்­ப­டியும் கட்­ட­டத்தை உடைக்க உத்­த­ர­விடும் படியும் கோரி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் 28 ஏ (3) ஆம் பிரிவின் கீழ் வழக்­கொன்­றினை தாக்கல் செய்­தது. 

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வழக்­கினை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்ட கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் கட்­டட நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு தடை விதித்து விசா­ர­ணையை ஜுன் மாதம் 8 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தாலும் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

இதை­ய­டுத்து கடந்த ஜுன் 15 ஆம் திகதி இரு தரப்பும் நீதி­மன்­றுக்கு தமது எழுத்து அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­தன. தீர்ப்பு வழங்­கு­வது ஜூலை 27 ஆம் திக­திக்கு ஒத்­து­வைக்­கப்­பட்­டது. என்­றாலும் அன்­றைய தினம் நீதிவான் சமு­க­ம­ளிக்­கா­மையால் பதில் நீதிவான் தீர்ப்பு வழங்­கு­வதை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்­தி­வைத்தார்.

அன்­றைய தினம் எமது சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். அன்றைய தினமே குறிப்பிட்ட வழங்கினை கொழும்பு மாநகர சபை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக நீதிவான் அறிவித்தார். 
இந்நிலையில் இது விவகாரத்தில் நீதி பெற்றுத்தரும்படி வேண்டுகிறோம் என இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் பிரதமரை வேண்டியுள்ளது. 

மாளிகாவத்தை மையவாடிக் காணி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஜனா­தி­ப­திக்கு கடிதம்
மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் விவ­கா­ரத்தில் தலை­யிட்டு நீதி பெற்­றுத்­த­ரு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் இக்­கோ­ரிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்­ள­துடன் இது தொடர்­பாக விளக்­க­ம­ளிப்­ப­தற்கு விரைவில் சந்­திப்­பொன்­றினை ஏற்­ப­டுத்­தித்­த­ரு­மாறு வேண்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள 2016.10.07 ஆம் திக­தி­யிட்ட கடி­தத்­திலே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

மைய­வாடிக் காணி ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோத கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் விடயம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் ஜனா­தி­ப­திக்கு தெரி­வித்­துள்­ளது. 

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘மைய­வா­டிக்­காணி ஆக்­கி­ர­மிப்பு 2007 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது. அன்று முதல் கொழும்பு மாந­கர சபை அதி­கா­ரிகள் மூலம் கட்­டட நிர்­மா­ணப்­ப­ணி­களை இரு தட­வைகள் எம்மால் நிறுத்த முடிந்­துள்­ளது. அக்­கா­லங்­களில் மாந­கர சபை முதல்­வர்­க­ளாக பிர­சன்ன குண­வர்­த­னவும் முஸ்­லிம்மிலும் இருந்­தார்கள். மாவட்ட நீதி­மன்­றிலும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றிலும் எம்மால் சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க முடிந்­தது. தற்­போது இது தொடர்பில் மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளது. 

இவ்­வா­றான எமது முயற்­சிகள் மூலம் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டுள்ள மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடிக் காணியை எம்மால் திருப்­பிப்­பெற முடி­யாமற் போயுள்­ளது. இதற்­கான காரணம் காணியை ஆக்­கி­ர­மிப்பு செய்­துள்­ளவர் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் நண்பர் என்­ப­த­ன­லாகும். 

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு நல்­லாட்சி அமைக்­கப்­பட்­ட­போது நாம் மகிழ்ந்தோம். சட்­டமும் ஒழுங்கும் நிலை நாட்­டப்­படும் என எதிர்­பார்த்தோம். உங்கள் நிர்­வா­கத்தின் கீழ் எமக்கு நியாயம் கிடைக்­கு­மென நினைத்தோம். 

2016 ஆம் ஆண்டு கொழும்பு மாந­க­ர­சபை முதல்­வ­ருடன் இது தொடர்­பாக பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். இதன் பய­னாக சட்­ட­வி­ரோத கட்­டட நிர்­மா­ணத்­திற்­கெ­தி­ராக உபாலி ஜய­சிங்க மீது மாந­கர சபை வழக்­கொன்­றினை தாக்கல் செய்­தது. இச்­சந்­த­ர்ப்­பத்­திலே கொழும்பு மாநா­கர சபை நிர்­வாகம் ஆணை­யா­ள­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. 

இந்­நி­லையில் குறிப்­பிட்ட வழக்கு 2016.08.24 ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­பட இருந்­த­நி­லையில் அன்­றைய தினம் மாந­கர ஆணை­யாளர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்­டுள்­ள­தாக நீதி­மன்றம் தெரி­வித்­தது. 

இது தொடர்­பாக மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் முறை­யிட்டோம். மாந­கர சபை தொடர்ந்த வழக்கை ஏன் மாந­கர சபையே வாபஸ் பெற்றுக் கொண்­டது என்­பதில் சந்­தேகம் நில­வு­கி­றது. 

அமைச்சர் பைசர் முஸ்­தபா இது தொடர்­பாக மாந­கர ஆணை­யா­ள­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பினார். மாந­க­ர­சபை ஆணை­யாளர் முத­ல­மைச்சர் கேட்டுக் கொண்­ட­தற்­கி­ணங்­கவே வழக்­கினை வாபஸ் பெற்றுக் கொண்­டதாக தெரி­வித்தார். பின்பு நாம் முத­ல­மைச்­சரை சந்­தித்தோம். தனக்கு மாளி­கா­வத்தை மைய­வாடி காணி தொடர்பில் விரி­வாக தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று கூறி­ய­துடன் இது தொடர்­பாக விசா­ர­ணை­யொன்று நடத்­து­வ­தாக தெரி­வித்தார். ஆனால் இது­வரை எந்­த­வி­சா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வில்லை எனத் தெரியவருகிறது. 

மைய­வாடிக் காணி விவ­கா­ரத்தில் மர்மம்
மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணி விவ­கா­ரத்தில் தொடர்ந்தும் மர்மம் நிலவி வரு­கி­றது. மாந­கர சபை முதல்வர் முஸம்மில் அதி­கா­ரத்தில் இருந்த போது தொட­ரப்­பட்ட வழக்கு ஆணை­யாளர் பத­விக்கு வந்த பின் வாபஸ் பெறப்­பட்­டுள்­ளது. அதுவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு திகதி குறிப்­பிட்டிருந்த கால எல்­லைக்குள் இது நடந்­தி­ருக்­கி­றது. 

மேல் மாகாண முத­ல­மைச்சர் தனக்கு மைய­வாடி காணி விவ­காரம் விரி­வாக தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதனாலே வழக்கினை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியிருக்கிறார். பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் இவ்வாறு தனக்கு தெளிவில்லாத ஒரு வழக்கினை வாபஸ் பெறமுடியுமா? 

விசாரணையொன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும் மையவாடி தரப்பினையும் கலந்து கொள்ளச் செய்வதாகவும் உறுதியளித்து இரு வாரங்களாகியும் இன்றுவரை எதுவும் நடைபெறவில்லை. இதன் மர்மம் என்ன? 

மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலையிட்டு மையவாடி காணிக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.


மாளிகாவத்தை மையவாடி காணி விவகாரம் : சட்டம் நிலைநாட்டப்படுமா? மாளிகாவத்தை மையவாடி காணி விவகாரம் : சட்டம் நிலைநாட்டப்படுமா? Reviewed by Madawala News on 10/16/2016 11:14:00 PM Rating: 5