Oceas

பாகிஸ்தானின் புதிய உக்தியால் இந்திய போர் விமானங்களை தரை இரக்குவதில் விமானிகள் திண்டாட்டம் !


ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டிய இந்திய பகுதியில் தரையிறங்கும் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு இசை மூலம் பாகிஸ்தான் ஹேக்கர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இரு நாடுகளின் எல்லையை ஒட்டிய ஜம்முவில் தரையிறங்கும் விமானிகள், ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பேசும் அலைவரிசையை ஹேக் செய்யும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்,அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவான பாடல்களை ஒலிக்க விட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர் 

விமானப் படை விமானங்கள் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் மட்டுமே ஜம்முவில் இரு நாடுகள் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறக்கப்படும் பொழுது ஜம்முவில் உள்ள கட்டுப்பாட்டு அறையை விஎச்எஃப் எனப்படும் உயர் அலைவரிசையைப் பயன்படுத்தி விமானங்கள் தகவல்களைப் பறிமாறிக் கொள்கின்றனர். 


ஆனால், இந்த வகை அலைவரிசை ஹேக் செய்யும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் தகவல் பறிமாற்றத்தைக் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பாடல்களை ஒலிக்க விடுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஜம்மு கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளும் அலைவரிசையை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தரையிறங்கும் கடைசி நேரத்தில் ஏற்படும் தகவல் பறிமாற்ற இடையூறு காரணமாக கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகவும்,இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் புதிய உக்தியால் இந்திய போர் விமானங்களை தரை இரக்குவதில் விமானிகள் திண்டாட்டம் ! பாகிஸ்தானின் புதிய உக்தியால் இந்திய போர் விமானங்களை தரை இரக்குவதில் விமானிகள் திண்டாட்டம் ! Reviewed by Madawala News on 10/04/2016 07:49:00 PM Rating: 5