தில்ருக்‌ஷியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம் ? பிரதமர் நாடு திரும்பியதும் இறுதி தீர்மானம் ...


லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழுவின் நிறைவேற்று  பணிப்பாளர் தில்ருக்‌ஷி டயஸின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமல் இருக்க தீர்மாணிதுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழு மற்றும் FCID , CID ஆகியவற்றின் செயற்பாடுகளை ஜனாதிபதி விமர்சித்ததை தொடர்ந்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழு நிறைவேற்று பணிப்பாளர் தில்ருக்‌ஷி டயஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்தார்.ஆனால் இதுவரை அவரின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகவில்லை .

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு சிவில் அமைப்புகள் கொடுத்துள்ள அழுத்தம் , விமர்சனங்கள் காரணமாக அவரை தொடர்ந்து பதவியில் நீடிக்க தீர்மாணித்துள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தெரிகிறது ...
தில்ருக்‌ஷியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம் ? பிரதமர் நாடு திரும்பியதும் இறுதி தீர்மானம் ... தில்ருக்‌ஷியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம் ? பிரதமர் நாடு திரும்பியதும் இறுதி தீர்மானம் ... Reviewed by Madawala News on 10/19/2016 08:54:00 AM Rating: 5