முஸ்லீம்களால் கையளிக்கப்பட்ட முக்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் ! விபரம் ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம்களுக்கு இடையேயான சந்திப்பு பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதிக்கு பலம் சேர்க்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள முஸ்லீம் முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாடு பூராவும் இருந்து முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சுமார் 500 பேர்  கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களிடம் முக்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போதய அரசு முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல விடயங்கள் தொடர்பில் விஷேட பொலிஸ் பிரிவுகளையும் ஜனாதிபதி விசாரனை குழுக்களையும் அமைத்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.ஆனால் அலுத்கம பேருவளை கலவரம் தொடர்பில் இதுவரை எதுவித விசாரனைகளையும் நல்லாட்சி அரசு முன்னெடுக்கவில்லை.

மேலும் குறித்த கலவரத்தை மஹிந்த அரசு நடத்தியதாக குற்றம் சுமத்தி வருகின்ற போதும் அதற்கு எதிராக விசாரனைகளை முன்னெடுத்து கலவரங்களுக்கு பொறுப்பான உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. 

எனவே தற்போது ஆட்சியில் உள்ள நல்லாட்சி அரசு மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் மீது தொடச்சியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல் முறையான விசாரனைகளை நடத்தி உண்மையான குற்றவாளிகளை ஆட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் இதற்கான கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்வைக்க வேண்டும் என மகஜர் ஒன்றின் மூலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லீம்களால் கையளிக்கப்பட்ட முக்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் ! விபரம் ... முஸ்லீம்களால் கையளிக்கப்பட்ட முக்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் ! விபரம் ... Reviewed by Madawala News on 10/05/2016 08:17:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.