Ad Space Available here

அமைச்சர் ரிஷாட் பதுர்தீனை சந்திக்க கிடைத்தபோது ..


உள் நுவைதற்கு முன்.....
நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. அதே நேரம் எந்தக் கட்சிக்கும் எதிரானவனுமல்ல.எனினும் அரசியல் மற்றும் பொதுநல விரும்புபவர்களின் ஊடாக சமூகத்துக்கு ஏதேனும் செய்ய முடியுமாயின் அதனை என் சக்திக்கு உற்பட்டு நீண்ட காலம் பணியாற்றி வருகிறேன். 

தனிப்பட்ட ஓர் விடயத்திலும், மடவளை பஸார் பிஹில்லதெனிய பகுதிக்கான கிலினிக் கட்டிடத்தின் அவசியம் குறித்தும் கலந்துரையாடுவதற்காக அமைச்சரை சந்திக்க வேண்டும் என ஏலவே நாடியிருந்தேன்.

இரவு (02-10-16) சுமார் 8:30 மணியளவில் வந்த தொலை பேசி அழைப்பினூடாக அமைச்சர் பக்கத்து ஊரில் இருப்பதாகவும், அவ்விடத்துக்கு வருமாறும் அழைக்கப் பட்டதற்கமைய அவ்விடத்துக்குச் செல்கிறேன்.

சுகநல விசாரணைளுக்குப் பின் இரவுணவுக்காக அமர்கிறோம். மேசையில் இருந்த உணவு சற்று ஏற்றுக் கொள்ளக் கடினமானதாக இருந்தது.  பானும் பருப்பும் தேங்காய் சம்பலும் தான் இரவுணவு. இதுவரை நான் கூறியவை முக்கியமானவையல்ல. இனி கூறப் போவதே என் மனதில் பதிந்த முக்கிய நினைவுகள்.

உணவு குறித்து:- 
சற்று முன்னர் அறிவித்திருந்தால்! உணவை தயார் பண்ணியிருக்கலாமே சேர் என்று நான் கூற.. "இல்லை திடீரென்று அறிவித்து பெண்களை கஸ்டப்படுத்தக் கூடாது. நாம் சிம்பலாக செய்ய சொன்னாலும் அவர்களின் ஆர்வம் அவர்களை பெரிதாக கஸ்டப் படுத்தும் என்கிறார்.அவரின் இச்சமயோசித நற்குணத்தை மனதால் பாராட்டியவனாக! முக்கியதோர் விடயத்தை கலந்துரையாடிய வண்ணம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். 

அப்போது அமைச்சரின் கட்சிசார்ந்த சில முக்கிய உருப்பினர்கள் அங்கே வருகிறார்கள்.அதே மேசையில் அரசியல் சார்ந்த சில கலந்துரையாடல்கள் அவர்களுக்கு மத்தியில் நடை பெறுகிறது.

((இக்கலந்துரையாடலில் நான் பார்வையாளனாக மட்டும் )). 

அக்கலந்துரையாடலின் போது அமைச்சரது கட்சி சாராத சில முஸ்லிம் அமைச்சர்கள் பற்றிய பேச்சு வருகிறது. அதனை எல்லாம் நிதானமாக செவிமடுத்துக் கொண்டிருந்த அமைச்சரவர்கள் பின்வருமாறு பேசத் தொடங்கினார்.அவர்து பேச்சு குறித்த பேச்சு அவர் கட்சி சார்ந்தவர்களுக்கு அவர் செய்த உபதேசமாகவே இருந்தது எனலாம். இவ்வுபதேசத்தால் சமூகத்துக்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் படிப்பினை இருக்கலாம் என்பதால் அதனை இங்கு பகிர்ந்து கொள்ள நாடுகிறேன்.

அமைச்சரின் உபதேசம்
நாம் எல்லோரும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அரசியலா சமூகமா என்று வந்தால்! சமூகத்தின் நலனையே தேர்ந்தெடுக்க வேண்டும்.ஒரு முஸ்லிம் எம்.பி பாராளுமன்றம் செல்வது சமூகத்துக்கே நல்லது.அவர் எந்த கட்சி என்பது முக்கியமல்ல. சில ஊர்களுக்கு அமைச்சர் ரவூப் ஹகீம் தேவைப்படுகிறார்.அங்கே அவருக்கு இருக்கும் வாக்குகளையும் வளத்தையும் நாம் கவிழ்க்கக்கூடாது.சில இடங்களுக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா தேவைப்படுகிறார். அங்கே அவருக்கு இருக்கும் வாக்குகளையும் வளத்தையும் நாம் கவிழ்க்கக் கூடாது. இது நாம் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும். ஏற்கனவே ஒரு மாவட்டத்தில் நாம் விட்ட பிழையால் பாராளுமன்றம் செல்ல வேண்டிய ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.நாம் அங்கே பெற்ற 2000 வாக்குகளை அவருக்கு விட்டுக் கொடுத்திருந்தால்! இன்னும் ஒரு முஸ்லிம் பிரநிதித்துவம் அதிகரித்திருக்கும்.எப்போது இந்தப் பிழையை நாம் விட்டோமோ அன்றே இனிவரக் கூடிய காலங்களில் இப்பிழையை விடக்கூடாது என்பதை உருதியெடுத்துக் கொண்டேன்.எனவே சில மாவட்டங்களில் நாம் அரசியலும் சேவையும் செய்வோம்.சில மாவட்டங்களில் சேவை மட்டும் செய்வோம். சமூகத்தின் வாக்குகள் துண்டாடப் படுவதைத் தவிர்ப்போம். என்று கூறி முடித்தார். 

(தொடர்ந்து  மடவளை பஸார்-பிஹில்லதெனிய பகுதிக்கு அவசியப் படும் கிலினிக் தொடர்பில் கலந்துரையாடிவிட்டு களைந்து வந்தேன்.)

உணர்ந்து கொள்வோம்... உயர்வு பெறுவோம்.
இதே மனநிலையும், உருதியும், உள்ளங்களுக்கு மத்தியிலான ஒற்றுமையும் ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகளிடமும் வருமேயானால்! சமூகத்துக்காக நாம் நிறைய சாதிக்கலாம்.  குறிப்பாக அரசியல் வாதிகளிடம் காணப்படும் போட்டி பொறாமை தவிர்க்கப் பட்டு புறிந்துணர்வுள்ள அரசியல் யுகமொன்றை நோக்கி நகர்வது காலத்தின் அவசியமாகும். அதே போன்று அரசியல்வாதிகள் மக்களுக்களித்து நிறைவேற்றப் படாத வாக்குறுதிகளால்!அரசியல் வாதியின் கருத்துக்கள் மக்களால் மதிக்கப்படாத அற்ப சொற்களாக மாறியுள்ளன. இதனை கருத்திற் கொண்டு அரசியலில் ஈடுபடுவோர் மக்களுக்கு வாக்களிக்கமுன் பல்முனையில் சிந்தித்து வாய்திறக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும். 

" யா அல்லாஹ் பேதங்களற்ற சேவைகள் மிகுந்த அரசியல் தலைமைகளை தந்தருள்வாயாக" 

இவன் அபூ ஸுமையா ,மடவளை பஸார், பிஹில்லதெனிய.


அமைச்சர் ரிஷாட் பதுர்தீனை சந்திக்க கிடைத்தபோது .. அமைச்சர் ரிஷாட் பதுர்தீனை சந்திக்க கிடைத்தபோது .. Reviewed by Madawala News on 10/03/2016 04:50:00 PM Rating: 5