புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் : அமைச்சர் கபீர் ஹஷீம் ..


புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டார்.

முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட  அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்...

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினர் போலி பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 70 வது மாநாட்டில் இந்த நாட்டில் பௌத்தர்களின் சிங்களவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என  எமது தலைவர் ரனில் விக்ரம சிங்க மிக தெளிவாக குறிப்பிட்டார்.புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துக்கே முதலிடம் வழங்கப்படும் தேரவாத பௌத்த மதத்தின் தெற்காசியாவின் கேந்திரஸ்தானமாக  இலங்கையை மீண்டும் மாற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுதிபூண்டுள்ளது.அதே இதர மதங்களுக்கும் அதற்குரிய ஸ்தானங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் : அமைச்சர் கபீர் ஹஷீம் .. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் : அமைச்சர் கபீர் ஹஷீம் .. Reviewed by Madawala News on 10/05/2016 10:24:00 AM Rating: 5