Free Space

பெரிய விடயங்களை விட்டு சிறிய ஊழல்களையே விசாரிக்கின்றனர்: ராஜிதவுக்கே அதிருப்தியாம்..


-ரொபர்ட் அண்டனி-

பாரிய ஊழல்கள் தொடர்பில் விசா­ரிக்­கப் 

ப­டாமை தொடர்பில் நானும் கடும் அதி­ருப்­தியில் இருக்­கின்றேன். அதா­வது சிறிய விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் விசா­ரணை நடத்­து­கின்­றது. ஆனால் மிக பெரிய

சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தில்லை. இது தொடர்பில் நான் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரு­டனும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 


அதா­வது சிறிய விட­யங்­களை விடுத்து மிகப் பெரிய விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என நாம் கோரு­கின்றோம். வெறு­மனே சிறிய விட­யங்­க­ளுக்­காக அதி­கா­ரி­களை விசா­ரிப்­பதில் அர்த்­த­மில்லை. அந்த வகையில் அர­சாங்­கத்தின் இந்த தாம­த­மான செயற்­பா­டுகள் தொடர்பில் நாங்கள் அதி­ருப்­தியில் இருக்­கின்றோம். என்ன நடக்­கின்­றது என்று புரி­யாமல் உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.


அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், 

மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனின் மரு­ம­கனின் நிறு­வ­ன­மா­னது பாரி­ய­ளவில் அசா­மான்­னி­ய­மான முறையில் இலாபம் உழைத்­தி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது குறித்து அர­சாங்கம் கணக்­காய்­வாளர் நாயகம் திணைக்­க­ளத்­தி­னூ­டாக விசா­ரணை நடத்தும். 


இந்த குற்­றச்­சாட்டு இப்­போ­துதான் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. அர­சாங்கம் நிச்­ச­ய­மாக இது தொடர்பில் விசா­ரணை நடத்தும்.


கேள்வி: வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர் 

ஜுன மகேந்­தி­ரனின் மரு­ம­கனின் நிறு­வ­னத் தின் அசா­மான்­ய­மான இலாபம் தொடர்பில் பொது எதி­ரணி கடு­மை­யான குற்றச்­சாட்­டுக்­களை முன் வைத்­துள்­ளதே?


பதில்:பொது எதி­ரணி எவ்­வாறு குற்­றச்­சாட்டை முன்­வைக்க முடியும். கடந்த காலத் 

தில் குறித்த நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுடன் தான் இணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருந்தார். அவர்­க­ளுக்­குத்தான் அது தொட­ர்பில் நன்­றாக தெரிந்­தி­ருக்கும். 


கேள்வி: விசா­ர­ணை­களில் ஏன் தாமதம் ?


பதில்: ஆம். தாமதம் இருக்­கத்தான் செய்­கி­றது. ஆனால் விரைவில் விசா­ரணை நடத்­து வோம். அர­சாங்கம் கட்­டாயம் விசா­ரிக்கும். 


கேள்வி: ஆனால் முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் விட­யத்தில் அர­சாங்கம் மௌன­மாக இருப்­ப­தாக தெரி­கி­றதே ?


பதில்:அப்­ப­டிக்­கூறமுடி­யாது. முதலில் நாங்கள் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­நரை அந்த பத­வி­யி­லி­ருந்து தூக்­கி­யதே பெரிய விட­ய­மாகும். கடந்த காலத்தில் அவ்­வாறு செய்ய முடி­ய­வில்லை. ஆனால் நாங்கள் செய்­தி­ருக்­கின்றோம். 


கேள்வி: பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டால் போதுமா?


பதில்: அப்­ப­டி­யில்லை. விசா­ரணை நடத்­துவோம். அர­சாங்கம் விசா­ரணை நடத்தும். 

கேள்வி: ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் 2500 கோடி ரூபா நஷ்­டத்தை எதிர்­நோக் கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே ?


பதில்: அந்த நிறு­வனம் நஷ்­டத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளது. வேறு என்­னதான் செய்­வது அதை தாங்­கித்தான் ஆக வேண்டும். 

கேள்வி: ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் நிறு­வ­னத் 

தின் முன்னாள் தலை­வரை விசா­ரித்­துள்­ளீர் ­களா ?


பதில்: சில தட­வைகள் விசா­ரிக்­கப்­பட்­டுள்ளார்.


கேள்வி: விசா­ரித்தால் மட்­டும்­போ­துமா ? வாக்­கு­மூலம் பெற்றால் மட்­டும்­போ­துமா ?

பதில் : வேறு என்ன செய்­வது. இந்த விட­யத்தில் நானும் கடும் அதி­ருப்­தியில் இருக்­கின்றேன். அதா­வது சிறிய விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் விசா­ரணை நடத்­து­கின்­றது. ஆனால் மிக பெரிய சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தில்லை. இது தொடர்பில் நான் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரு­டனும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். 


அதா­வது சிறிய விட­யங்­களை விடுத்து மிகப் பெரிய விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என நாம் கோரு­கின்றோம். வெறு­மனே சிறிய விட­யங்­க­ளுக்­காக அதி­கா­ரி­களை விசா­ரிப்­பதில் அர்த்­த­மில்லை. அந்த வகையில் அர­சாங்­கத்தின் இந்த தாமத­மான செயற்­பா­டுகள் தொடர்பில் நாங்கள் அதி­ருப்­தியில் இருக்­கின்றோம். என்ன நடக்­கின்­றது என்று புரி­யாமல் உள்­ளது.


பதில்:சட்டா மா அதிபர் திணைக்­க­ளத்­திலும் தாமதம் உள்­ளது. வேறு சில விட­யங்­க­ளிலும் தாமதம் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. நாங்கள் பல தடவை இது தொடர்பில் கூறி­விட்டோம். ஆனால் ஒன்றும் நடப்­ப­தாக தெரி­ய­வில்லை. 


கேள்வி: இது தொடர்பில் விசா­ரித்­துள்­ளீர்­களா?


பதில்:இந்த தாமதம் தொடர்பில் நாங்கள் கேள்வி எழுப்­பினால் வேறு கார­ணங்­களை சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றனர். என்­ன­வென்று புரி­ய­வில்லை.


கேள்வி: நட­வ­டிக்கை எடுக்­கப்பயப்­ப­டு­கின்­ றீர்­களா?


பதில்:பயம் ஒன்றும் இல்லை. சிறு விவ­கா­ரங்­களை விடுத்து பெரிய விட­யங்கள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண் டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும். அவ்­வாறு செய்தால் மூன்று நான்கு மாதங்­களில் இவற்றை முடித்­து­வி­டலாம். 


கேள்வி: அமைச்­ச­ர­வையில் முடி­வெ­டுக்க முடி­யாதா?


பதில்: அமைச்­ச­ர­வையில் முடி­வெ­டுக்­கலாம். 

கேள்வி: அமைச்சர் தய­ாசிறி ஜெய­சே­கர அர­ சாங்­கத்­திற்குள் ஊழல்வாதி­யி­ருப்­ப­தாக கூறு­கின்­றாரே .


பதில்: அவ்­வாறு இருப்பின் அதனை அமைச்சரவையில் கூறலாமே. அதனை விடுத்து ஏன் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறுகின்றவர்கள் கடந்த காலத்தில் எங்கிருந்தார்கள். நாங்கள் அப்படி இருக்கவில்லை. எங்களுக்கு பிரச்சினை வரும்போது நாங்கள் நேரடியாக அந்த காலத்தில் அமைச்சரவையில் பேசினோம். 

அதுமட்டுமன்றி அரசியல் ரீதியான தீர்மானத்தையும் எடுத்தோம்.


கேள்வி: விமல் வீரவன்ச கைது செய்யப் படவுள்ளதாக மஹிந்த கூறியுள்ளாரே ?


பதில்: அவருக்கு தெரியுமாக இருக்கும். எமக்கு ஒன்றும் தெரியாது.

பெரிய விடயங்களை விட்டு சிறிய ஊழல்களையே விசாரிக்கின்றனர்: ராஜிதவுக்கே அதிருப்தியாம்.. பெரிய விடயங்களை விட்டு சிறிய ஊழல்களையே விசாரிக்கின்றனர்: ராஜிதவுக்கே அதிருப்தியாம்.. Reviewed by Madawala News on 10/06/2016 08:52:00 AM Rating: 5