tg

ஜனாதிபதியின் அதே நிலைபாட்டிலேயே பிரதமரும் உள்ளார் ! நேற்றைய சந்திப்பு தொடர்பில் கபீர் ...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்.சி.ஐ.டி., சி.ஐ.டி., மற்றும் லஞ்ச ஊழல் திணைக்களம் என்பன குறித்து தெரிவித்த அதே நிலைப்பட்டிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயளாலர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

வட்டாரம பிரதேசத்தில் இன்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்...

நேற்றிரவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில் நாமும் கலந்துகொண்டோம்.ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் குறித்து பல்வேறுவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதனால் ஜனாதிபதி அதனைத் தெளிவுபடுத்தினார்.

நாம் அமைத்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஜனாதிபதியின் முழுமையான பங்களிப்பு உண்டு என அவர் குறிப்பிட்டார்.நல்லாட்சியை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கும் இந்நாட்டின் சட்டம் இறைமையை நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது எடுத்துக் கூறினார்.

ஜனாதிபதியினால் நிகழ்த்தப்பட்ட  உரையில் பிரச்சினைக்குரிய ஒரு இடம் காணப்பட்டது.முன்னாள் இராணுவத் தளபதி அல்லது இராணுவத்திலிருந்த அதிகாரிகள் ஆகியோரில் யாரையாவது நீதிமன்றத்துக்கு அழைக்கப்படும் போது, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும், ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோருக்கும் அறிவுறுத்தல் வேண்டும் என்பதுவே அதுவாகும்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டில் தான் பிரதமரும் காணப்படுகின்றார்.இந்த இருவருக்கும் அறிவிக்கப்படாமல் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுவே ஜனாதிபதி அன்று விடுத்துள்ள செய்தியாகும் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று விளக்கமளித்துள்ளார். 


ஜனாதிபதியின் அதே நிலைபாட்டிலேயே பிரதமரும் உள்ளார் ! நேற்றைய சந்திப்பு தொடர்பில் கபீர் ... ஜனாதிபதியின் அதே நிலைபாட்டிலேயே பிரதமரும் உள்ளார் ! நேற்றைய சந்திப்பு தொடர்பில் கபீர் ... Reviewed by Madawala News on 10/14/2016 10:32:00 PM Rating: 5