Ad Space Available here

உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்ய வேண்டாம்


அண்மையில் 12.10.2016 திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய
சுகாதார பிரதியமைச்சரும் ஒருங்கிணைப்பு தலைவருமான சகோ பைஸால் காசீம் உரையாற்றிய போது. 

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்கும் முகமாக.

அதற்கான அறிக்கையை ஒருவார காலத்துக்குள் சமர்பிக்குமாறு. அமைக்கபட்ட குழுவுக்கு பணித்துள்ளதாக செய்திகள் ஊடாக அறிய கிடைத்தது.

கெளரவ அமைச்சர் அவர்களே! நீங்கள் கூறியிருப்பது பிரதியமைச்சர் மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற வகையில் உங்கள் கடமையாக  இருந்தாலும். சில விடயங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த ஒலுவில் ஊர் பெரிய நிலப் பரப்பையோ அதிகளவான சனத்தொகையை கொண்ட ஒரு நகரமல்ல மாறாக கடல் தொழிலையும் விவசாயத்தையும் ஒரு பிரதான வருமானமாக கொண்டிருக்கும் அழகிய பிரதேசமாகும்.

இந்த ஊர் தேசிய வருமானத்துக்கு அற்பணித்த ஊர் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாக இருந்தாலும்.

அபிவிருத்திகள் என்றாலும் சரி தொழில் விடயம் என்றாலும் சரி கல்வி விடயமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாக என்றாலும் சரி அன்றிலிருந்து இன்றுவரை எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டு வருகின்ற ஊர் என்றால். அது ஒலுவில்தான் என்பதை நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

அது மட்டுமா? இந்த ஊர் எவ்வளவு செழிப்போடும் சந்தோசமாகவும் எல்லோராலும் கவரப்பட்ட அழகிய இடமாக இருந்தது. ஆனால் எப்போது அபிவிருத்தி என்ற ஒரு வட்டத்துக்குள் உள்வாங்கப் பட்டதோ அன்றிலிருந்து இரையாக்கப் பட்டு கொண்டிருக்கிறது.

ஒரு புறம் பெரும்பான்மை சமூகத்தர்களால் இரவோடு இரவாக நிலம் அடைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.மறுபுறம் துறைமுகம் என்ற பெயரில் பிரதேசம் காவு கொள்ளப் பட்டது. அதற்கான நஸ்ட ஈடு எட்டாக் கனியாக இருந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமா பல்கழைக் கழகம் என்றும் அதில் ஒலுவில் மக்களுக்கு தொழில் வாய்புக்களில் முன்னுருமை என்றும் பல்லாயிரக் கணக்கான தொன்னைகள் அழிக்கப்பட்டு அடைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது. ஆனால் வெறும் கண் துடைப்பே தொழில் வாய்ப்பாகும்.

போதாக்குறைக்கு எஞ்சியுள்ள பகுதியையும் கடல் உள்வாங்கப் பட்டு கொண்டிருக்கு.  அதனால் பல குடும்பங்கள் தொழிலையும் இழந்து நிலங்களையும் கடலுக்கு இரையாக்கி விட்டு செய்வதறியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இப்போது பாதுகாப்பு என்ற போர்வையில்.அங்கு புதிதாக பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு.முதற்கட்ட காணி ஒதுக்கீடு முன்னெடுப்புகள் ஆரம்பிக்க பட்டு இருப்பதை நினைக்கும் போது மனவேதனையை உண்டு பண்ணுவது மட்டுமல்ல.  

"இச் செயல் எரிகிற நெருப்பில் எண்னெயை ஊற்றுவது போன்றாகும்"

நாட்டின் பாதுகாப்பை மதிக்கிறோம் வரவேற்கிறோம் அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

ஆனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிக்குள் வேறு ஊரில்தான் இந்த பொலிஸ் நிலையம் அமைக்க சகல ஏற்பாடும் செய்யப் பட்டது ஆரம்பத்தில்.   இருந்தும் அங்குள்ள உள்ளூர் அரசியல் வாதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட நிலையில்தான்.

எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்ட ஒலுவிலுக்கு மாற்றினீர்கள். இலகுவாக அந்த மக்களை ஏமாற்றலாம் என்ற ஒரு எண்ணத்தில் மாற்றிணீர்களா? இல்லை நீங்கள் கூறும் காரணம்தான் என்ன?

அப்படியே நீங்கள் கூறுவது போன்று தென்கிழக்கு பல்கழைக் கழகத்தையும், துறைமுகத்தையும் எடுத்து கொண்டாலும். அங்குதானே பாதுகாப்பு பல ஆண்டுகளாக  இருந்து கொண்டுதான் இருக்கு.
ஏன் ஒலுவில் பிரதான வீதியில் கூட பெரிய ஒரு தளம் இருக்கு. இவைகள் இருந்தும் இன்னும் ஒரு பொலிஸ் நிலையம் எதற்கு?  தேவைதானா ?

இந்த பொலிஸ் நிலையம் அமைய பெற்றால் பாதுகாப்பு என்பது பெயரளவில் மட்டும்தான்.
மாறாக காலாச்சார சீரழிவுகள் ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

"வேலியே பயிரை மேய்ந்த கதைதான் ஏற்படும்"  காரணம் ஏற்கனவே கசப்பான அனுபவம் அந்த ஊரில் ஏற்பட்டதை மறுக்கவோ மறக்கவோ முடியாது!

(கடற்படை முகாம் இருந்த நேரத்தில். இப்போது அல்-மினாரா பாடசாலை இருக்கும் இடத்தில்)

ஆனால் அங்குள்ள ஒரு சில அராசியல் முகவர்கள்.மக்களை காட்டி அரசியல் பிட்சை எடுத்து தனது பையை நிரப்புகின்ற முதுகெழும்பு இல்லாத வாய்மூடி அரசியல்வாதிகள்.தனது சுய இலாபங்களுக்காக அந்த இடங்களை காட்டி கொடுத்தாலும்.

ஊரிலுள்ள சமூகத்தை பத்தி சிந்திக்கின்ற. பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படிப் பட்ட பிரட்ச்சினைகளை எதிர் நோக்குவார்கள் என யோசித்த புத்திஜீவிகள்,பள்ளி நிர்வாகிகள்,பொது அமைப்புக்கள் அக்கோரிக்கையை நிராகரித்து தடுத்தார்கள் அன்று.

ஒட்டுமொத்த மக்களின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கிறது!

கெளரவ அமைச்சர் அவர்களே!
அபிவிருத்திகள் என்று வந்தாலும், தொழிச்சாலைகள் என்று வந்தாலும்,பிரதேச சபை என்று வந்தாலும் வேறு ஊருக்கு கொண்டு செல்லப் படுவதும்.

அங்கு அதற்குரிய இடம் இல்லாவிட்டாலும் பள்ளங்களையும் மடுவுகளையும் நிரப்பியாவது செய்து கொடுக்கப் படுகின்றத்தை கானக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் இப்படியான பாதுக்கப்பு என்ற போர்வையில் வரும் பிரச்சினையை மட்டும். ஒலுவில் மக்கள் தலையில் கட்ட பார்ப்பது எந்த வகையில் நியாயம் ?

ஏன் அங்கு கேட்பதற்கு ஆள் இல்லை என்ற ஒரு எண்ணமோ?இல்லை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை வெற்றி கரமாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதற்காக அந்த மக்களை பலிக்காடவாக்குவது என்ற நிலைப்பாடா உங்களுக்கு?

சரி அப்படித்தான் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் முன் வைத்த கோரிக்கை என்றாலும். அந்த ஊர் மக்களின் நிலைப்பாட்டையும் நியாயமான காரணங்களையும் எடுத்துத் கூறி.
பொலிஸ் நிலையம் இல்லாத வேறு ஊருக்கு மாற்ற முடியும்தானே உங்களால்.

அதைச் செய்யாமல் எல்லாப் பக்கத்தாலும் பாதிக்கப் பட்ட ஒலுவிலை. பாதுகாப்பு என்ற போர்வையில் கலாட்சார சீரழிவுகளை உண்டுபன்னி வேடிக்கை பார்க்கலாம் என்றா அரசியல் நகர்வுகளை நகர்த்துகிறீர்கள்.

தயவு செய்து அங்குள்ள ஒரு சில குள்ளநரி அரசியல் செய்பவர்களின் வார்த்தையை கேட்டு. எதிர்கால சந்ததினர்களின் வாழ்கையை சீரழிப்பதற்கு நீங்களும் துணையாக இருந்து விடாமல்.

அங்குள்ள நிர்வாகிகள்,புத்திஜீவிகள்,பொது அமைப்புக்கள் பாமரமக்களின் விருப்பப்படி இந்த முயற்சியை நிரந்திரமாக கைவிட்டு விட்டு.

அந்த மக்களுக்கு ஏதும் உதவி செய்ய விரும்பினால் உருப்படியாக வேறு ஏதாவது செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த பக்கபலமாக இருங்கள் என தாழ்மையாக வேண்டுகிறேன்.

இல்லா விட்டால் உதவி செய்யா விட்டாலும். உபத்திரம்  செய்ய  வேண்டாம் என்பதை கூறிக்கொள்கிறேன் கெளவர அமைச்சர் அவர்களுக்கு.


ஒலுவில் ஜெலில்.
உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்ய வேண்டாம் உதவி செய்யா விட்டாலும்  பரவாயில்லை உபத்திரம்  செய்ய  வேண்டாம் Reviewed by Madawala News on 10/22/2016 02:00:00 AM Rating: 5