Oceas

ஜனாதிபதியின் கோபம் நியாயமானது !


ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் நாளுக்கு நாள் தாமடைவதைக் கண்டு ஜனாதிபதிக்கு கோபம் வருவது ஆச்சரியமானதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை பன்னிப்பிட்டி பாதையிலுள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கருத்து வெளியிட்ட அவர்...

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் நாளுக்கு நாள் தாமடைவதைக் கண்டு ஜனாதிபதிக்கு கோபம் வருவது ஆச்சரியமானதல்ல கோபம் அடந்துள்ளது ஜனாதிபதி மாத்திரம் அல்ல மக்களும் தான்.

குறித்த நிறுவனத்திலுள்ளவர்கள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில் காட்டும் ஆர்வத்தை, பாரிய ஊழலில் ஈடுபடும் திருடர்களைப் பிடிப்பதில் காட்டாதுள்ளனர்.இது தொடர்பில் மிக அவசரமாக முடிவுக்கு வரவேண்டும் என குறிப்பிட்டார்.



ஜனாதிபதியின் கோபம் நியாயமானது ! ஜனாதிபதியின் கோபம் நியாயமானது ! Reviewed by Madawala News on 10/14/2016 07:14:00 AM Rating: 5