Ad Space Available here

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் மறைமுக சக்தி ..-எம் எப் எம் பஸீர்-
மாளிகாவத்தை இந்த பெயரை கேட்டதும் முதலில் எல்லோர் மனதிலும் வந்து  மறையும்  படம் பாதாள உலகமும்  அதனுடன்  தொடர்புடைய  நடவடிக்கைகளுமே அதனாலோ என்னவோ தலைநகராம் கொழும்பின் மத்திய பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் இப்பகுதியை  அச்சத்துடன் பார்க்கும்  பலர்இ  அபிவிருத்தியுடன்  கூடிய  மனநிலையுடன் பார்ப்பதில்லை எனலாம். அதன் விளைவு தமிழ் பேசும் முஸ்லிம்களை அதிகளவு கொண்ட  இந்த பகுதி  பலரின் எண்ணங்களை சரி காண்பது போல அடிதடி கட்டப் பஞ்சாயத்து பாதாள உலக செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு  குற்றச் செயல்களுக்கு பெயர் கூறும் அளவுக்கு மாறிவிட்டது. 

எனினும் இந்த மாளிகாவத்தை
யிலும் உள்ளவர்கள் சாதாரண
மனிதர்கள் என்பதையும் அவர்களது
அடிப்படை தேவைகள்இ பிரச்சினை
கள் என்ன என்பது குறித்தும் பலரும் கண்டுகொள்ளாமல் இருப்
பது கவலைக்குரியது. இதன் விளைவு தலை நகர் கொழும்பின் மத்திய பகுதியில் நவீன உலகத்துடன் போட்டிபோட்டு மீண்டெழும் ஒரு சமூகம் முடக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

மாளிகாவத்தையில்  வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் வெளிப்படையாக தோன்றும்  போதும்  எப்பல்வத்தை உள்ளிட்ட  பல சேரிப் பகுதிகளில் சுமார் 13000 குடும்பங்கள் வரை பலகைகளால் வேயப்பட்ட அடிப்படை வசதிகளற்று ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை அதுதான். கழிவு நீர் கால்வாயின் கரைகளில் அமைந்துள்ள அக்குடிசைகளில் கல்வி கற்கும் வயதில் உள்ள  பல பிள்ளைகளுடன் எழுத்துக்களால் விபரிக்க முடியாத கஷ்ட நிலையில் வாழும் அம்மக்களை அவதானிக்கும் போது அவர்களது தேவைகள் பல  பட்டியல் படுத்தப்படக்கூடியன.

பிரதான தேவையாக வீட்டுத்தேவை அவர்களிடம் காணப்படும்  நிலையில் அனைத்து சவால்களையும்இ அச்சேரிகளில்  வாழும்  பிள்ளைகளுக்கு முறையான கல்வியை  வழங்குவதன் ஊடாக வெற்றி கொள்ள முடியுமென்பது யாராலும் மறுக்கப்பட முடியாதது. 

மாளிகாவத்தை எனும் பெயர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள மனநிலை மாற்றமடைய வேண்டுமானால்  அங்கு சிறந்த அறிவு சார்ந்த சமூகம் ஒன்றினை உருவாக்குவதன் ஊடாக மட்டுமே சாத்தியமாக்க முடியும். 

அப்படியானால் அதனை செய்வதற்கு மாளிகாவத்தையிடம் உள்ள ஒரே மூலதனம் தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயம்  மட்டுமே. 1916 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலவன் பாடசாலையில்  தற்போது  சுமார் 1250 மாணவர்கள் வரையில் கல்வி  பயில்கின்றனர். நூறு ஆண்டுகள் பழமையான இப்பாடசாலையின்  நூற்றாண்டு விழா கூட அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிலையில் இடம்பெற்றிருந்தது. கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இந்த நூற்றாண்டு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
 
உண்மையில் ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொண்ட போது இப்பாடசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. பாடசாலையின் பழைய மாணவர்கள்இ நலன்விரும்பிகளின் சுட்டிக்காட்டுதல்களோடு  இந்த அவதானிப்புக்களை ஜனாதிபதி அவதானித்திருந்தார். 

இதன்போது தான் கொழும்பு மாவட்டத்தின் கல்வி நிலையினை உயர்த்த பல்வேறு  திட்டங்களை  அமுல் செய்துவரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றான செரண்டீப் பாடசாலை அபிவிருத்தி மன்றம்ஊடாக தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்துக்கு ஒரு  உதவித்திட்டம்  கிடைத்தது.உலக மேமன் அமைப்பொன்றின் பூரண ஒத்துழைப்பில் குறித்த பாடசாலையை  மாளிகாவத்தையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும்  மாணவர்களின் கனவுகளை நிஜமாக்கும் திட்டமே அது. திட்டத்தின்  பெறுமதி சுமார் 240 மில்லியன்  ரூபா குறித்த அமைப்பூடாக ஏற்கனவே  2014 ஆம் ஆண்டு 14 மில்லியன் ரூபா செலவில் மாடிக்கட்டடம் ஒன்று வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே நூற்றாண்டு பழமை வாய்ந்த தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தை தலைநகரின் முன்னணி பாடசாலைகளுக்கு சமாந்திரமாக மாற்றி மாளிகாவத்தையை அறிவியல் சமூகமாக  மாற்றும் திட்டத்துக்கு அமையவே இந்த 240 மில்லியன் ரூபா திட்டம் நன்கொடையாக பாடசாலைக்கு கிடைத்திருந்தது. 

இதனூடாக  இப்பாடசாலையில் புதிதாக மூன்றுமாடி கட்டடமொன்று கட்டப்பட்டு  39 வகுப்பறைகள் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதனைவிட  அனைத்து  வசதிகளுடன் கூடிய  கேட்போர் கூடம் சிறுவர் பூங்கா விளையாட்டு மையங் கள்இ நீச்சல் தடாகம் என அனைத்தும் அந்த திட்டத்தில் உள்ளடங்கும்.
 
மாளிகாவத்தையை முழுமையாகவே மாற்ற வித்திடும் இத்தகைய திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று நூற்றாண்டு விழாவில் அதற்கான அடிக்கல்லையும்  நாட்டிவைத்திருந்தார்.

இந்நிலையில்  தான்  கிட்டத்தட்ட 9 மாதங்களாகியுள்ள  நிலையில் மாளிகாவத்தையின் தலையெழுத்தை  மாற்றும் என எதிர்பார்த்த அத்திட்டம் தொடர்பில் ஆராயத் தொடங்கிய போது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாளிகாவத்தை  மாணவர்களின்  கல்வி உரிமையை பறிக்கும் விதமாக ஏதோ ஒரு மறைமுக சக்தி தனது சித்து விளையாட்டுக்களை காட்டிக் கொண்டிருக்கிறது என்பது புலனானது. 9 மாதங்களாகியும் 240 மில்லியன் ரூபா திட்டம்  ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. 

தானாக முன்வந்த நன்கொடையாளிகளிடமிருந்து பழைய மாணவர்கள் பாடசாலையிடம் தொடர்புபட்டவர்கள்   என  பல தரப்பையும் விசாரணை செய்ய  முற்பட்ட போது தான் எமக்கு கிடைக்கப்பெற்ற கொழும்பு வலய கல்விக் காரியாலயம் மேல் மாகாண கல்வி அமைச்சர மேல் மாகாண சபை ஆகியவற்றின்  சில கடிதங்கள் பாடசாலையுடன் தொடர்புடைய சிலரின் வாக்கு மூலங்களின் படி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிய அடிக்கல் தொடர்பிலான  திட்டத்தை நிறுத்தி செயற்படும் அளவுக்கு மாளிகாவத்தையில் ஒரு சக்தி செயற்படுகிறதா என்ற சந்தேகங்களை எழுப்பியது. 

உண்மையில் கல்வி அமைச்சானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி 'அருகில் உள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை' எனும் திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்தது. தேசிய மட்டத்தில் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவது இதன் பிரதான நோக்கமாகும். 
அதன்படி முதற்கட்டமாக  அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் விதமாக 600 பாடசாலைகள் அபிவிருத்திக்கு என தெரிவு செய்யப்பட்டன. 

இதனைவிட உயர்தர வகுப்புக்கள் தொடர்பிலான  அபிவிருத்திக்கு என 1200 பாடசாலைகளும் 776 இரண்டாம் நிலை பாடசாலை அபிவிருத்தி திட்டங்களும் 3577 ஆரம்பப் பிரிவு அபிவிருத்தி  திட்டங்களும்  கல்வி அமைச்சின்  குறித்த திட்டத்துக்குள் மேலதிகமாக உள்ளடங்கும். இந்த  அபிவிருத்தியில் அனைத்து பாடசாலைகளும் உள்ளடக்கப்படாத நிலையில் உள்ளடக்கப்பட்ட பாடசாலைகள் கூட முழுமையான அபிவிருத்திக்கு உள்ளாகுமா என்பது கேள்விக்குறியே!

ஆரம்பத்தில் கல்வி அமைச்சினால் இத்திட்டத்துக்குள் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலை  சேர்க்கப்படாத  போதும் பின்னர் விசேட திருத்தங்கள் ஊடாக அத்திட்டத்தில்  சேர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. 

இந்நிலையில் தான் கல்வி அமைச்சின் 'அருகில் உள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை' எனும் திட்டத்தின் ஊடாக தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்துக்கு சிறு பழுதுபார்த்தல் வேலைகள் தொடர்பில் நிதி வழங்கப்பட்டது. இதனால் சில சக்திகளின் அழுத்தங்களுடன் ஜனாதிபதி அடிக்கல் நாட்டி வைத்த 240 மில்லியன் ரூபா பெறுமதியான அங்க சம்பூரணமான கனவுப் பாடசாலை திட்ட நிர்மாணங்கள் எவ்வித ஆரம்பமும் இன்றி உள்ளது. 
மாளிகாவத்தையின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு வகுக்கப்பட்டதாக  கருதப்பட முடியுமான இத்தகைய பாரிய கல்வித் திட்டமொன்று  அரசியல அதிகார போட்டிகளுக்காகவே திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளதை அல்லது நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதை  கேசரியின் ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக அறியமுடிகிறது. 

எனவே தான்  நாட்டிய அடிக்கல் தொடர்பிலான திட்டம் குறைந்த பட்சம் அத்திவாரத்தையேனும் காணாது முடங்கிப் போயுள்ளமை தொடர்பிலும் அதற்கான காரணம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவதானம்  செலுத்த வேண்டும். 

அவ்வாறு அவதானம் செலுத்தும்  பட்சத்தில் அப்பாவி மாணவர்களின் கல்வியுடன்  விளையாடுபவர்கள்  அல்லது மாளிகாவத்தை மாண வர்கள தலைநகரின் முன்னணி பாட சாலைகளில் கற்கும் மாணவர்கள் பெறும்  கல்விச் சூழலை பெறுவதை தடுக்கும் சக்தியை இனம் காண முடியும். 

அவசரமாக இந்நடவடிக்கை இடம்
பெறாவிடின்இ மாளிகாவத் தையின் மாற்றத்துக்காக அதன் கல்விக்காக முதலீடு செய்யவந்த  நன்கொடை யாளர்கள் 240 மில்லியன் ரூபா திட்டத்தை கைவிட வேண்டி ஏற்படும்.  அவ்வாறானதொரு நிலை ஏற்ப
டின் அது மாளிகாவத்தை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாண வர்களையே பெரிதும் பாதிக்கும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் மறைமுக சக்தி .. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் மறைமுக சக்தி .. Reviewed by Madawala News on 10/23/2016 11:03:00 PM Rating: 5