Accaddemy

ஜனாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் பகி­ரங்க வேண்­டுகோள்.


அம்­பாறை மாவட்­டத்தில் பொது மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் அநே­க­முள்­ள­தா­கவும், யானை – பொது­மக்கள் மோதல் இந்த மாவட்­டத்­திலும் பார­தூ­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ள­தா­கவும், வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­தினர் யானை­களைத் தடுப்­ப­தற்கு மின்­சார வேலி­களைப் போட்­டா­லும்­கூட, உண்­மையில் காட்டு யானை­களின் அட்­ட­கா­சத்­தினால் பாதிக்­கப்­படக் கூடிய மக்கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றார்­களா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தா­கவும், அந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு மேலும் சாத்­தி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் பகி­ரங்க வேண்­டுகோள் ஒன்றை விடுத்தார்.

அத்­துடன் கரும்புச் செய்­கையில் மக்கள் பாரிய பிரச்­சி­னையை எதிர்­நோக்­கு­வ­தா­கவும், அர­சாங்க அதிபர் முன்­னி­லையில் அதி­கா­ரிகள், கரும்புச் தொழிற்­சாலை உரி­மை­யா­ளர்கள் உட்­பட கரும்புச் செய்கை விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு பல கூட்­டங்கள் நடத்­தப்­பட போதிலும் உரிய பலன் கிட்­ட­வில்லை எனவும், ஆகையால், கரும்புச் செய்­கை­யோடு சம்­பந்­தப்­பட்ட அந்த அப்­பாவி விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­களில் ஜனா­தி­பதி தலை­யிட்டு உரிய தீர்­வு­களை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபையின் மஹா­ஓய நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றுப் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இந்தக் கோரிக்­கை­களை முன்­வைத்தார். இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு உரை­யாற்­றுப்­பொ­ழுது மேலும் தெரி­வித்­த­தா­வது,  இந்தச் சுத்­தி­க­ரிப்பு நிலையம் மூலம் 17 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு நீர் வழங்­கப்­ப­டு­கின்­றது.

இத­னோடு சேர்த்து அம்­பாறை மாவட்­டத்தில் 80 வீத­மான நிலப்­ப­ரப்பில் வசிப்­ப­வர்­க­ளுக்கு தூய நீரை பெற்றுக் கொடுக்கக் கூடி­ய­தாக இருக்கும்.

2019ஆம் ஆண்­டாகும் போது ஜனாதிப­தி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் சிறு­நீ­ரக நோய்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்ள ரஜ­ரட்ட பிராந்­தி­யத்தில் அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை மாவட்­டங்­களில் 90 வீத­மான நிலப்­ப­ரப்பில் வசிப்­போ­ருக்கு சுத்­த­மான நீரைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு எங்­க­ளுக்கு கிட்டும்.

அடுத்­தாண்டில் 3 இலட்சம் மில்­லியன் ரூபா செலவில் பாரிய நீர் விநியோகத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் அரைவாசியான ஒன்றரை லட்சம் ரூபாய்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கான நீர் விநியோகத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்றார்.
ஜனாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் பகி­ரங்க வேண்­டுகோள். ஜனாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் பகி­ரங்க வேண்­டுகோள். Reviewed by Madawala News on 10/23/2016 01:22:00 PM Rating: 5