யெமனில் போர் சுமந்து வந்த பஞ்சம் ...

 


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று 
சம அளவான சுன்னி சியா முஸ்லீம் மத பிரிவை கொண்ட மத்திய கிழக்கில்  உள்ள ஒரே ஒரு வறுமையான நாடான ஏமனில் ஏட்பட்டுள்ள உள்நாட்டு யுத்தம் மற்றும்  சவுதி அரேபியாவின் வான்  தாக்குதல் என்பன வற்றினால் தொழில் துறைகள் பாதிக்க பட்டு வருமானம் இன்றி மக்கள் பஞ்சத்தின் பசிக்கு மக்கள் இரையாகி வருகின்றனர்  

ஏமன் நாட்டில் பண பற்றாக்குறை மற்றும் வர்த்தக துறை முகங்கள் மூடப்பட்டுள்ளதால் கடும் பஞ்சம் ஏற்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் பண பற்றாக்குறை மற்றும் வர்த்தக துறை முகங்கள் மூடப்பட்டுள்ளதால் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையால் ஏழை மக்கள் மிகவும் துயரமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஏமன் நாட்டு அதிபர் அப்த் ரபாக் மன்சூர் ஹாதி கடந்த மாதம் தலைநகர் சனாவில் உள்ள மத்திய வங்கியை , தெற்கில் உள்ள ஏடனுக்கு மற்ற உத்தரவிட்டார்.பின்பு மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரையும் நியமித்தார்.இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் மத்திய வங்கியில் பணம் ஏதும் இல்லை என பதவியேற்ற உடன் அறிக்கையிட்டார்.

ஏமன் மீது சவுதி அரேபியா கடந்த 18 மாதங்களாக நடத்திய போரில் , அந்நாட்டு அதிபர் அப்த் ரபாக் மன்சூர் ஹாதி நாடு கடத்தப்பட்டார்.மேலும் ஏமன் நாட்டின் பெரும் பாலான பகுதிகள் சவுதி அரேபியா நடத்திய தாக்குதலில் உருக்குலைந்து காணப்படுகிறது.
மேலும் சவுதி அரேபியா அரசு ஏமன் நாட்டு துறை முகத்தில் காட்டும் கெடுபிடியால் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளது.இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உணவு பஞ்சத்தில் தவிக்கின்றனர்.

இந்த பெரும் உணவு பற்றாக்குறையால் குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதனால் அந்நாட்டு மருத்துவமனைகள் முழுவதும் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் , எடை குறைந்த மற்றும் வளர்ச்சி இல்லாத குழந்தைகள் காணப்படுகின்றனர்.

இது குறித்து ஒரு செவிலியர் கூறியதாவது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 முதல் 20 குழந்தைகள் வரை இது போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் அனுமதிக்கப்படுவர். ஆனால் தற்போது மாதம் 120 குழந்தைகள் வரை இது போன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலைமை நீடித்தால் ஏமன் நாட்டில் உள்ள 50 சதவீத குழந்தைகள் கூடிய விரைவாக ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஆளாக கூடும் என உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கொடுத்த அறிக்கையால் , ஏமன் நாட்டின் வர்த்தகம் மேலும் மோசமடையும் , உலகிற்க்கு ஏமன் நாட்டின் நிதி நிலைமை அப்படமாக தெரியக்கூடும். இதனால் வர்த்தக நிறுவனங்கள் ஏமன் நாட்டுடனான தங்களது வர்த்தகத்தை நிறுத்திவிடுவார்கள் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து வர்த்தக நிறுவனம் ஒன்று கூறுகையில் , பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான எந்த பண பரிவர்த்தனையும் செய்ய வங்கிகள் ஒத்துழைப்பது இல்லை . இதனால் அரசுக்கு எதிராக முறையில் பண பரிவர்த்தனைகள் செய்ய வேண்டியுள்ள நிலையில் தற்போது ஏமன் நாடு கடத்தல் நாடாக மாறி வருகிறது.

ஆனால் இது தொடர்பாக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
samuuஏமன் நாட்டு சமூக அபிவிருத்தி நிதி அமைப்பு தலைவர் இப்ரகாம் மொகமத் , நாட்டின் நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் அவசர கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும் என தெரிவித்துள்ளார்.

யெமனில் போர் சுமந்து வந்த பஞ்சம் ... யெமனில் போர் சுமந்து வந்த பஞ்சம் ... Reviewed by Madawala News on 10/05/2016 08:31:00 PM Rating: 5