அக்கரைப்பற்றில் வீ-ட்ரஸ்ட் நடாத்திய இரத்ததான நிகழ்வு...


(ஏ.எல்.நிப்றாஸ்)
சமூக மேம்பாட்டு அமைப்பான 'வீ-ட்ரஸ்ட்' அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம், அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 

இதன்போது, அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 50 சமூக நலன்விரும்பிகளும் தன்னார்வ செயற்பாட்டாளர்களும் இரத்த வங்கிக்கு தமது உதிரத்தை வழங்கினார்கள்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் அஸ்-ஸிறாஜ்; மகாவித்தியாலயம் போன்றவற்றில் 2001ஆம் ஆண்டில் உயர்தரம் கற்று வெளியேறிய மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'வீ-ட்ரஸ்ட்' அமைப்பானது சமூக கலாசாரம், வாழ்வாதாரம், கல்வி, அனர்த்த உதவி போன்ற பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில், இவ்வமைப்பின் இன்னுமொரு முயற்சியாக மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைப்பின் சுகாதார பிரிவு நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஜீ.எம்.ஷயீ தலைமையிலான குழுவினர் முன்னின்று நடத்திய இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ரி.கே. ஷம்ஸ் நிஹால் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்த சேகரிப்பு சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் வீ-ட்ரஸ்ட் நடாத்திய இரத்ததான நிகழ்வு... அக்கரைப்பற்றில் வீ-ட்ரஸ்ட் நடாத்திய இரத்ததான நிகழ்வு... Reviewed by Madawala News on 10/17/2016 10:07:00 PM Rating: 5