பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் புறா கைது !


இந்தியாவை எச்சரிக்கும் விதமான கடிதத்துடன் எல்லை தாண்டி வந்த புறாவை இந்திய பாதுகாப்பு படையினர் பிடித்து, போலீஸ் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உருது மொழியில் எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதங்கள் மூலம் மிரட்டல்கள் அனுப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரின் கேஷல் கிராமத்தில் நேற்று முன்தினம் 2 பலூன்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் உருது மொழியில், ‘மோடிஜி, பாகிஸ்தான் பழிவாங்கும்’ என்பன போன்ற எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில், பதன்கோட் பமியல் செக்டார் சிம்பால் முகாம் பகுதிக்கு சாம்பல் நிற புறா ஒன்று எல்லை தாண்டி பறந்து வந்தது. அந்த புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். 

புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த கடிதத்தில், ‘மோடிஜி, 1971ல் (இந்தியா-பாக். போர் நடந்த ஆண்டு) இருந்ததைப் போன்ற மக்களாகவே எங்களை எண்ணாதீர்கள். இப்போதுள்ள ஒவ்வொரு குழந்தையும் கூட இந்தியாவுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறது’ என உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பதன்கோட் போலீசார் புறாவை காவலில் அடைத்து வைத்து, அதை அனுப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் புறா கைது ! பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் புறா கைது ! Reviewed by Madawala News on 10/03/2016 07:51:00 AM Rating: 5