Oceas

கூட்டு எதிர்கட்சியையும் இணைத்துக்கொண்டு சுதந்திர கட்சி ஆட்சியமைக்க வேண்டும் ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ,கூட்டு எதிர்கட்சியை இணைத்துக்கொண்டு சுதந்திர கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்..

தற்போது உள்ள நிலைமையில் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் மனோனிலையில் மாற்றம் வர வாய்ப்புகள் இல்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ,கூட்டு எதிர்கட்சியை இணைத்துக்கொண்டு சுதந்திர கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.ஏனென்றால் சுதந்திர கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கை இவ்வாறே உள்ளது. 

தற்போது உள்ள சூழ்நிலையில் 2020 வரை எமக்கு ஐக்கிய தேசிய கட்சியிடன் செல்ல
முடியாது என்ற நிலைமை தோன்றியுள்ளது.எனவே நாம் சக்தி மிக்க சுதந்தித கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டு எதிர்கட்சியையும் இணைத்துக்கொண்டு சுதந்திர கட்சி ஆட்சியமைக்க வேண்டும் ...  கூட்டு எதிர்கட்சியையும் இணைத்துக்கொண்டு சுதந்திர கட்சி ஆட்சியமைக்க வேண்டும் ... Reviewed by Madawala News on 10/14/2016 12:58:00 AM Rating: 5