இஸ்ரேலுக்கு எதிரான பிரேரனைக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை ?


இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஜெரூஸலம் நகரில் அல் குத்ஸ் வளாகத்துக்குள் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஹரம் அல் ஷரப் பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் 2016 அக்டோபர் 13ல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது இலங்கையின் குரல் மௌனித்துப் போய்விட்டது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்..

ஒரு  காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் உரிமைக்காக சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்த குரல் இலங்கையின் குரல்.ஆனால் மிகவும் கௌரவமான முறையில் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த இலங்கையின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகும்.இது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த 1.5பில்லியன் முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும் என குறிப்பிட்டார்.

இவரது கேள்விக்கு விளக்கம் அளிக்க வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர  வழங்க அமைச்சர் மங்கள சபையில் இருக்கவில்லை.

இது தொடர்பில் அவரிடம் இருந்து விளக்கத்தை பெற்றுத்தருவதாக பிரதி சபாநாயகர் குறிப்ப்பிட்டார்.
இஸ்ரேலுக்கு எதிரான பிரேரனைக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை ? இஸ்ரேலுக்கு எதிரான பிரேரனைக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை ? Reviewed by Madawala News on 10/28/2016 03:45:00 PM Rating: 5