Free Space

பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் வெளிவாரிப் பட்டப் பரீட்சையில் பாரிய மோசடி மூலம் பட்டம் பெற்றமை அம்பலம்


 

எம். ஏ. அஹமட்
இலங்கையில் மூன்றாம் இனம் பெரும்பான்மையாகக் காணப்படும் பல்கலைக்கழகம் ஒன்றில் வெளிவாரிப் பரீட்சையில் மோசடி செய்து பட்டம் பெற்றமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என பல்வேறு பொது அமைப்புகள் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுபற்றித் தெரியவருவதாவது..

கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் விளையாட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றிய ஒருவர் குறித்த பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்து அதன்மேல் தமது கல்வியையும் 2010ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்டுள்ளார். 

எனினும் அவரால் குறித்த வெளிவாரிப் பட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட பரீட்சைகளில் தோற்றி விடை எழுதுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் அவரால் உரிய முறையில் அப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடை எழுத முடியவில்லை.

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக அப்பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய பரீட்சைக்குப் பொறுப்பான ஒரு உயர் அதிகாரியின் துணையுடன் விடைப் புள்ளிகள் பதியப்படும் வரலாற்றுத்தாளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு பரீட்சையில் சித்தியடைந்து பட்டமும் பெற்றுள்ளார்.

குறித்த விளையாட்டு உத்தியோகத்தர் மோசடியாக தமது பட்டத்தை பெற்றது மட்டுமல்லாமல் அதே பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய முன்னாள் உபவேந்தரின் துணையுடன் அப்பல்கலைக்கழகத்தின் விளையாட்டுப் பயிற்சி உத்தியோகத்தராகவும் சேர்ந்து தமது கடமைகளை மேற்கொண்டுள்ளார். எனினும் இவர் தமது சக உத்தியோகத்தர்களுடன் அடிக்கடி முரன்பட்டு தமக்கு முறையாக விளையாட்டு தெரியாமையை மறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நிர்வாகத்தை பல்வேறு உயர் உத்தியோகத்தர்களின் மூலம் சிபாரிசு செய்யுமாறு தூண்டி அப்பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக்குப் பொறுப்பான பதிற் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு தில்லுமுள்ளுகள் மூலம் பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் நிர்வாகத்தை பிழையாக நடாத்தி பணிப்பாளர் பதவி எடுத்தமை தொடர்பில் விசனமடைந்த இவரது சக உத்தியோகத்தர்கள் இவரது வெளிவாரிப் பட்டக் குளருபடியை விசாரிக்க வேண்டும் என பல்வேறு அறிக்கைகளை விட்ட வண்ணமுள்ளனர். அதன் ஒரு அங்கமாக இவரது பட்டப்பரீட்சை அவரது புள்ளிகள் அடங்கிய வரலாற்றுத்தாள்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புள்ளி மாற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குற்றப்புலனாய்வுப் பிரிவில் மிக அண்மையில் முறையிடவுள்ளனர். எனத் தெரியவருகின்றது.

குறிப்பு: இவ்விடயம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களை ஆதாரங்களுடன் மிக விரைவில் மடவள நியூஸ் மூலம் வெளியிடப்படும்.
பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் வெளிவாரிப் பட்டப் பரீட்சையில் பாரிய மோசடி மூலம் பட்டம் பெற்றமை அம்பலம் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் வெளிவாரிப் பட்டப் பரீட்சையில் பாரிய மோசடி மூலம் பட்டம் பெற்றமை அம்பலம் Reviewed by Madawala News on 10/03/2016 09:25:00 PM Rating: 5