கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகளான ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ...


(எஸ்.அஷ்ரப்கான்)

அண்மையில் வழங்கப்பட்ட கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகளான ஆசிரியர்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியர்கள் வெளிமாகாணங்களில் நியமிக்கப்பட்டு இதுவரை பதவிகளை பொறுப்பேற்காதவர்கள் இன்றும், நாளையும் 29, 30 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சமூகமளித்து தங்களின் பதவியை பொறுப்பேற்காததை உறுதிப்படுத்தும் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டை அத்துடன் ஆசிரியர்  நியமனக் கடிதத்தின் மூலப் பிரதி ஆகியவைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி  அமைச்சர் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். 

குறைந்த விண்ணப்பங்களே கிடைத்துள்ளமையால் உடனடியாக குறித்த   ஆசிரியர்கள் தகவல்களை குறித்த தினங்களில் சமர்ப்பிக்குமாறும் இதற்காக வேண்டி குறித்த தினங்களில் விசேடமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலகம் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகளான ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ... கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகளான ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ... Reviewed by Madawala News on 10/29/2016 06:09:00 PM Rating: 5