மங்கள,பொன்சேகா, சம்பிக்க உடனடியாக பதவி விலக வேண்டும் ...

வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மௌனமாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சம்பந்தனா தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசுவது ஏன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோது மௌனமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பிற்காக தற்போது ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றது.

ஜெருசேலம் தொடர்பில் யுனெஸ்கோ முன்வைத்துள்ள பிரேரணைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஆனால் அதற்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தன.

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு பக்கசார்பு இடம் பெற்று வருகின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் சரத் பொன்சேகா, பாட்டலி, மங்கள சமரவீர, போன்றோர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


மங்கள,பொன்சேகா, சம்பிக்க உடனடியாக பதவி விலக வேண்டும் ... மங்கள,பொன்சேகா, சம்பிக்க  உடனடியாக பதவி விலக வேண்டும் ... Reviewed by Madawala News on 10/24/2016 07:08:00 PM Rating: 5