பொலிஸ் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி அவரின் கீழ் கொண்டுவரவேண்டும் ...


FCID மற்றும் CID தொடர்பிலும்  முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமை தொடர்பில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அதிருப்தி வெளியிட்டமை தொடர்பில் தங்கள் அமைப்பு மகிழ்ச்சி அடைவதாக சிங்கள ராவய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இன்று கொழுப்பில் அவ்வமைப்பு ஏற்பாடு செய்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பொது செயளாலர் மாகல் கந்தே சுதந்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ...

ராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் வேட்டையாடப்படுவது நிறுத்தப்படவேண்டும் எனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசிய கட்சியின் கையில் இருப்பது பாரிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி குறித்த அமைச்சை அவருக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டார்.
பொலிஸ் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி அவரின் கீழ் கொண்டுவரவேண்டும் ... பொலிஸ் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி அவரின் கீழ் கொண்டுவரவேண்டும் ... Reviewed by Madawala News on 10/14/2016 07:23:00 PM Rating: 5