சர்வதேச பாடசாலைகளை நெறிப்படுத்த புதிய சட்டமூலம் : கல்வி அமைச்சர் ...


இலங்கையில் உள்ள சகல சர்வதேச பாடசாலைகளையும் கல்வி அமைச்சின் பூரண நெறிப்படுத்தலின் கீழ் கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன சர்வதேச பாடசாலைகள் திடர்பில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு பதில் அளித்த அவர்...

கடந்த வருடம் பத்திரிகை விளம்பரம் மூலம் இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலைகளின் விபரங்களை கோரியதன் ஊடாக 200 சர்வதேச பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சு பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தி இலங்கையில் உள்ள சகல சர்வதேச பாடசாலைகளினதும் தகவல்களை திரட்டி பாடத்திட்டம் , கொடுப்பனவுகள் உள்ளிட்ட சகல விடயங்களையும் நெறிப்படுத்த புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
சர்வதேச பாடசாலைகளை நெறிப்படுத்த புதிய சட்டமூலம் : கல்வி அமைச்சர் ... சர்வதேச பாடசாலைகளை நெறிப்படுத்த புதிய சட்டமூலம் : கல்வி அமைச்சர் ... Reviewed by Madawala News on 10/26/2016 01:09:00 PM Rating: 5