உதயங்க வீரதுங்கவுக்கு பிடியாணை !

இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரான ஊடாக கைதுசெய்ய, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதன்படி, இன்டர்போல் பொலிஸாருக்கு இது தொடர்பான ரெட் நோட்டீசை அனுப்பி உதயங்கவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

சர்வதேச பொலிஸாரின் ஊடாக உதயங்கவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையிலேயே, இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

இலங்கை விமானப் படையினருக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
உதயங்க வீரதுங்கவுக்கு பிடியாணை ! உதயங்க வீரதுங்கவுக்கு பிடியாணை ! Reviewed by Madawala News on 10/20/2016 03:39:00 PM Rating: 5