Sunday, October 2, 2016

கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் !

Published by Madawala News on Sunday, October 2, 2016  | 

(ஸஹ்ரின் எம் இஸ்மத் )
விவசாயம் செய்துவரும் எமது காணிகளை மேய்ச்சல் தரையாக்க விடமாட்டோம் என கண்டனத்தைத் தெரிவித்தும் ஆறு அம்ஷகோரிக்கையை முன்வைத்தும் கிண்ணியா பிரதேச விவசாயிகள்  திங்கட்கிழமை  கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைமடுஇ செம்பிக்குளம் இ பனிச்சம்குளம் இ விவசாய சம்மேளனங்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட கண்டல்காடு வழைமடு செம்பிமோட்டை வட்டமடு கல்லறுப்பு செம்பிமோட்டை மேற்கு விகாரகல சுண்டியாறு இ கொவிகஸ்வௌ மற்றும் புளியங்குளம் ஆகிய விவசாயக் கிராமங்களைச் சேர்ந்த. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடந்தமாதம் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேற்படி கிராமங்களிலுள்ள விவசாய செய்து வந்த சுமார் 3500 ஏக்கர் நிலங்களை கால் நடைகளுக்னகான மேய்ச்சல் தரைகளாக்குவதென எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தே இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தார்கள்.
 
1970ஆம் ஆண்டு முதல் விவசாய நடவடிக்கையில் ஈடுப்படு வந்த வேளையில் யுத்த சூழ்நிலை காரணமக 1990ம் ஆண்டில் விவசாய நடவடி;ககையை கைவிட்டு மீண்டும் 2002ம் ஆண்டு தொடக்கம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழககூட்டத்தில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினால் கடந்த 46 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொண்டுவந்த சுமார் 1500ற்கு மேற்டபட்ட விவசாயக் குடும்பங்கள்  தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளதுவெனவும் அவர்கள் தெரிவத்தார்கள்.

1070 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து காடுவெட்டி களனியாக்கி விவசாயம் செய்து வரும் எமது வயல் நிலங்களுக்கு இதுவரை உறுதி;ப்பத்திரம் வழங்கப்படவில்லை. சுமார் 600 விவசாயிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நல்லாட்சி  அரசாங்கத்திற்கு அபகீர்த்;தி ஏற்படுத்தும் வகையில்  அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் குறுக்கீடுகளினால் அம் முயற்சி தடைப்படுத்தப்ட்டுள்ளது எனவும் ஜனாபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உப உணவு பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் கடந்த வருடம் முதல் உப உணவு பயிர்ச்செய்கை திட்டத்தை ஆரம்பித்து நடை முறைப்படுத்தி வரும் இச் சந்தர்ப்பத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆர்பாட்த்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

1990 ஆண்டுக்குப்பின் ஏற்பட்ட யுத்த நிலைகாரணமாக
மேற்படி நிலங்களுக்குசெல்லமுடியாத நிலையிருந்தபோதும்
2002ஆம் ஆண்டுக்கப்பின் துப்பரவு செய்து விவசாயம் செய்துவருகிறோம். 20015 முதல் அக்காணிகளுக்குள் போகக்கூடதென தடை விதிக்கப்பட்டது மாத்திரமல்ல வழங்கப்பட்டு வந்த உரமானியமும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பின்வரும் அறு அம்ஷகோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் நடாத்தப்படுகிறது.
 
❖ வாழைமடு செம்பிக்குளம் பனிச்சம் குளம் ஆகிய மூன்று சம்மேளனங்களுக்கும் விதிக்கப்பட்ட தடையுத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும்.

❖ இடைநிறுத்தப்பட்டவிவசாய உரமானியத்தை  உடன்வழங்கி புதிதாக விண்ணப்பித்த 837 விவசாயிகளுக்கும் உரமானியம் வழங்கப்பட வேண்டும்.

❖ காணிக்கச்சேரி நடாத்தி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குக.

❖ கணி அனுமதிப் பத்திரத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு காணிக்கச்சேரி நடத்துக.

❖ தரிசு நிலங்களை துப்பரவு செய்து விவசாயம் செய்ய அனுமதி வழங்கு.

❖ மேற்படி எமது கோரிக்கைகளுக்குரிய உத்தரவாதத்தை உடணடியாக எழுத்துமூலம் தரவேண்டும் இல்லாவிடின் எமது போராட்டம் தொடரும் எனவும் கோரியுள்ளனர்.

இதன் போது இக்கோரிக்கை அடங்கிய கடிதத்தினை கிண்ணியா பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ்சிடம் விவசாய சம்மேளனத் ஒன்றியத் தலைவர்கள் கையளித்தார்.  
 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top