Free Space

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விரைவில் தீர்க்கமான தீர்மானம் !



(எம்.சி.நஜி­முதீன்)

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை இன்று தாய்­மார்­க­ளுக்­கான பரீட்­சை­யாக மாறி­யுள்­ளது. அப்­ப­ரீட்­சையை தடை­செய்ய வேண்டும் என ஒருசாராரும் அதனைத் தொடர வேண்டும்என இன்­னொரு சாராரும் கருத்து தெரி­விக்­கின்­றனர். 


எனவே அது சம்­பந்­த­மாக விரைவில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­க­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.


கல்­வி­யியற் கல்­லூ­ரி­களில் டிப்­ளோமா பாட­நெ­றி­யினை நிறைவு செய்த மூவா­யி­ரத்து இரு­நூற்று இரு­பத்­தைந்து பேருக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 


அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கல்­வியற் கல்­லூ­ரி­களில் டிப்­ளோமா பாட­நெ­றி­யினை நிறைவு செய்­த­வர்­க­ளுக்கு,இரு மாத கால அவ­கா­சத்தில் ஆசி­ரியர் நிய­மனம் வழங்க முடிந்­துள்­ளது. கடந்த காலங்­களில் பாட­நெ­றி­யினை நிறைவு செய்த பின்னர் ஆசி­ரியர் நிய­மனம் பெறு­வ­தற்கு நீண்ட நாட்கள் காத்­தி­ருக்க வேண்டி இரு­ந­தது. எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை கருத்­திற்­கொண்டு விரை­வாக நிய­மனம் வழங்க நட­வ­டிக்கை எடுத்­தது.


இலங்கை வர­லாற்றில் கல்­வியற் கல்­லூ­ரிகள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கல்­வி­ய­மைச்­ச­ராக பதவி வகித்த காலப்­ப­கு­தி­யி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டன. ஆசி­ரியத் தொழி­லா­னது மிகவும் உன்­ன­த­மா­கன தொழி­லாகும் ஏனெனில் ஏனைய சகல தொழில்­து­றை­க­ளையும் உரு­வாக்கும் தகைமை அசி­ரியத் தொழி­லுக்­கே­யுள்­ளது. 


ஆகவே இன்று மூவா­யி­ரத்து இரு­நூற்று இரு­பத்­தைந்து பேர் ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மனம் பெறு­கின்­றீர்கள்.

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விரைவில் தீர்க்கமான தீர்மானம் ! புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விரைவில் தீர்க்கமான  தீர்மானம் ! Reviewed by Madawala News on 10/05/2016 09:40:00 AM Rating: 5