Accaddemy

கூட்டு எதிர்கட்சியை கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள மீண்டும் தீவிர முயற்சி...


ஶ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பு  உறுப்பினர்களை மீண்டும் அக்கட்சியுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் அமைச்சர் மஹிந்த அமர இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அவர் புரிந்துணர்வு யோசனை ஒன்றை கூட்டு எதிர்கட்சிக்கு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில் கூட்டு எதிர் கட்சி உறுப்பினர்கள் இந்த யோசனை தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் இந்த யோசனைகளுக்கு அவர்கள் உடன்படும் பட்சத்தில் கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் சுதந்திர கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என தெரிகிறது.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்கும் விரிசல் வழுத்துவரும் நிலையில் கூட்டு எதிர்கட்சியை சுதந்திர கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழ்நிலையில் இந்த முயற்சியில் சுதந்திரப்கூட்டமைப்பு மைத்ரி அணி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கூட்டு எதிர்கட்சியை கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள மீண்டும் தீவிர முயற்சி... கூட்டு எதிர்கட்சியை கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள மீண்டும் தீவிர முயற்சி... Reviewed by Madawala News on 10/23/2016 09:41:00 AM Rating: 5