தேசிய அரசாங்கத்திற்கு எதிரான பயணம் நாளை மறுதினம் ஆரம்பம்


எம்.சி.நஜி­முதீன்

மக்கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து "மோச­டிக்­கா­ரர்­களும் பாது­கா­வ­லர்­களும்" எனும் தொனிப்­பொ­ருளில் நாடு தழு­விய ரீதியில் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. அதற்­கி­ணங்க எதிர்­வரும் முதலாம் திகதி கொழும்­பிலும், இரண்டாம் திகதி காலி­யிலும், மூன்றாம் திகதி ஹம்­பாந்­தோட்­டை­யிலும், நான்காம் திகதி குரு­நா­க­லிலும் விழிப்­பு­ணர்­வூட்டும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க எம்.பி. தெரி­வித்தார். 

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மை­ய­கத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த அர­சாங்­கத்தால் நாட்டில் நல்­லாட்­சியை முன்­னெ­டுக்க முடி­யாது. மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் மீறி­விட்­டது. ஊழல்,மோச­டி­களை இல்­லாமல் செய்­வ­தாகக் கூறிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம், ஊழல், மோச­டிக்­கா­ரர்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­கி­றது. ஆகவே தேசிய அர­சாங்கம் மக்­களின் அபி­லா­ஷை­களை வென்று கொடுக்­கு­மென இனி ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது. 

அத்­துடன் நாட்டில் தற்­போது தரா­தரம் பார்த்து சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சாதா­ர­ண­மா­ன­வர்கள் சிறு தவறு செய்­தாலும் அவர்­க­ளுக்கு உரிய முறையில் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எனினும் வசதி படைத்­த­வர்­களும் அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்­களும் பாரி­ய­ள­வி­லான குற்­றங்­களைச் செய்­கின்ற போதிலும் அவர்கள் உரிய சட்ட நடை­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அவ்­வா­றா­ன­வர்­களை ஆட்­சி­யி­லுள்­ள­வர்கள் பாது­காக்­கின்­றனர். இது ஜன­நா­ய­கத்­திற்குப் புறம்­பான விட­ய­மாகும்.

ஆகவே தேசிய அர­சாங்­கத்­தி­லுள்ள இரு கட்­சி­களும் நாட்டில் சிறந்த ஆட்சியை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. குறித்த இரு கட்சிகளினதும் ஆட்சி காலாவதியாகி விட்டது. எனவே நாட்டில் முறையான ஆட்சியை கொண்டு நடத்துவதற்கு புதிதொரு பலம் தேவையாக உள்ளது என்றார்.

தேசிய அரசாங்கத்திற்கு எதிரான பயணம் நாளை மறுதினம் ஆரம்பம் தேசிய அரசாங்கத்திற்கு எதிரான பயணம் நாளை மறுதினம் ஆரம்பம் Reviewed by Madawala News on 10/30/2016 12:30:00 PM Rating: 5