வாள்வெட்டு கலாச்சாரத்தை ஒழிக்க யாழில் அதிரடி நடவடிக்கை..

பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழு  நேற்று  நடத்திய தேடுதல் வேட்டையின் போதே இந்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.


வடமாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரால் உருவாக்கப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழு யாழ்ப்பாணத் கொக்குவில் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையொன்றை முன்னெடுத்திருந்தனர். 

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு உட்பட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல்களை கைது செய்வதற்கு இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்றுள்ளது. 

இதற்கமைய, வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டதுடன், மேலும் மூவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 


இதேவேளை, யாழ் குடாநாட்டில் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக குறித்த பொலிஸ் குழுவுக்கு அறியத்தருமாறும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் விசேட பொலிஸ் குழு உடனடியான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை வாள்வெட்டுக் கும்பல்  தீயிட்டுக் கொழுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
வாள்வெட்டு கலாச்சாரத்தை ஒழிக்க யாழில் அதிரடி நடவடிக்கை.. வாள்வெட்டு கலாச்சாரத்தை ஒழிக்க யாழில் அதிரடி நடவடிக்கை.. Reviewed by Madawala News on 10/21/2016 10:31:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.