Free Space

நுவரெலியாவில் நளீன் பண்டாரவை தள்ளிவிட்ட பேய் ?

 
ஐக்கிய தேசிய கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார் விடுதி அறை குளியலறையில் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளார்.

நுவெரிலியாவில் உள்ள பாரளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் (சனி) நேற்றுமுன்தினம் தங்கியிருந்துள்ள அவர் ஞாயிறு அதிகாலை மூன்று மணியளவில் இந்த சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நலீன் பண்டார ..

ஞாயிறு அதிகாலை மூன்று மணியளவில் விடுதி அறை குளியலறைக்கு தான் சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டடுள்ளார்.

1905 வருடம் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் 1980 முதல் பாராளுமன்ற உறுப்பினர்  விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் தன்னை அமானுஷ்மான எதோ ஒன்று தள்ளிவிட்டதாகவும் தான் பேய் பிசாசு போன்றவற்றை நம்புவதில்லை ஆனால் இது போன்ற இரு சம்வத்துக்கு முகம்கொடுத்தவுடன் தான் குழப்பமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் நளீன் பண்டாரவின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் நளீன் பண்டாரவை தள்ளிவிட்ட பேய் ? நுவரெலியாவில் நளீன் பண்டாரவை  தள்ளிவிட்ட பேய் ? Reviewed by Madawala News on 10/10/2016 09:22:00 AM Rating: 5