இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடாது ! அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை...


இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு போராளிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28–ந் தேதி பதில் தாக்குதல் நடத்தியது.

காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அணு ஆயுத தாக்குதலை இந்தியா மீது நடத்துவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் கடந்த 15 தினங்களில் இரண்டு முறை தெரிவித்தார். 

இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த சில தினங்களுக்கு முன்  அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த காவ்ஜா ஆசிப், நாங்கள் அணு ஆயுதங்களை காட்சிக்காக வைக்கவில்லை எனவும் இந்தியா அத்து மீறி நடந்தால் அந்நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவோம் அந்நாட்டை அழிப்போம் என்று பேசி இருந்தார். 

பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் திரும்ப திரும்ப கோரி வருகிறோம். இது போன்ற பொறுப்பற்ற வகையில் பேசுவதை பாகிஸ்தான்  உயர்மட்ட நிறுத்த வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரித்துள்ளது.
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடாது ! அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை...  இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடாது ! அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை... Reviewed by Madawala News on 10/01/2016 12:29:00 PM Rating: 5