Kidny

Kidny

அசோக் லேலண்ட் பஸ்ஸில் அல்ல… உங்களை கால்நடையாகவே செல்லும் நிலையை ஏற்படுத்துவர்.. 

கல்முனையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாகிபுக்கு அசோக் லேலண்ட் நிறுவன தலைமைப் பொறுப்பை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வழங்கியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அம்பாறை மாவட்டத்திலிருந்து புதிது, புதிதாக இணைந்து கொண்ட பலருக்கு அமைச்சரின் கீழ்வரும் நிறுவனங்களில் பெரிய.பெரிய  பதவிகளை வழங்கி வந்த நிலையில் சிராஸ் மீராசாகிபும் அன்று   கைத்தொழில் வர்த்தக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.


இருப்பினும், மற்றவர்களுக்கு வழங்கிய பதவிகளை போன்று தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் எதுவும் இல்லை என்பதனால் அதனை இராஜினாமாச் செய்து விட்டு கட்சியின் செயற்பாடுகளுடனேயே கோபித்துக் கொண்டவராக சிறிது காலம் ஒதுங்கியிருந்தார். அந்த இடைவெளியில், மீண்டும் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையப் போவதாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்த நிலையில்தான் இப்போது அவருக்கு பொறுப்பான பதவி ஒன்றை அமைச்சர் ரிஷாத் வழங்கியுள்ளார். அமைச்சரின் பாடசாலை தோழன் என்பதனாலும் பிரதியமைச்சர் அமீர் அலி ஒற்றைக் காலில் நின்றதாலுமே இந்தப் பதவியை சிராஸ் மீராசாகிப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

அம்பாறை மாவட்டத்தின் சில அரசியல்வாதிகள்,பிரமுகர்கள் கடும் ஆட்கள்தான். ரிஷாத்தை பிடித்து பதவி பெறுவதில் ரொம்பவும் கெட்டிக்காரர்கள். 33,000 வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்றுக் கொடுத்தற்காக அமைச்சர் ரிஷாத் எப்படியெல்லாம் ஊழிப் பணி செய்ய வேண்டியுள்ளது. வன்னியின் மைந்தன் என அந்தப் பிரதேச மக்களால் போற்றப்பட்டு வன்னி மக்களால் வெற்றி வாகையும் சூடப்பட்ட அமைச்சர் ரிஷாதின் திரிசங்கட நிலைமைகளை நன்கு உணர்ந்த வன்னி மக்களே அவரை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாமல் எந்தப் பதவி பந்தாக்களையும் அவரிடம்கேட்டுப் பெறதா  நிலையில், அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் அந்தக் கட்சி சார்பில் ஒரு எம்பியைக் கூடத் தெரிவு செய்யும் அளவுக்கு வாக்குப் பலத்தை வழங்காமல் இந்த 33,000 வாக்குஜால மந்திரத்தை மடடும் வைத்துக் கொண்டே அமைச்சர் ரிஷாத்தை குறவன் தனக்கு வேண்டியபடி மகிடியை ஊதி பாம்பை ஆட்டுவது போன்று ரிஷாத்தை ஆட்டிப் படைக்கின்றனர்.  . அவரும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், இதன் பிரதிபலன்கள் (பாதகங்கள்) அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல வன்னியில் கூட அமைச்சர் ரிஷாத்தை எதிர்காலத்தில் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்ற விடயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பாம்பாட்டத் தெரிந்த குறவனுக்கு குரங்கு வித்தை காட்டுவது பெரிய வேலையல்ல என்பதனை அமைச்சர் புரிந்து கொண்டுஇவ்வாறானவர்கள் விடயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாகச் செயற்பட வேண்டும். 

எனது நண்பர் சிராஸ் மீராசாகிபையே நான் இங்கு குற்றம்கூறுவதாக எவரும் நினைத்து விட வேண்டாம். அவர் செயற்றிறமை கொண்டவர். கிடைக்கும் சந்த்ர்ப்பத்தை சமூக நலனுக்காக பயன்படுத்தக் கூடியவர். அவர் கல்முனை மேயராக இருந்த போது செய்த சேவைகளை நான் இன்றும் நன்றியுடன் நினைவு கொள்கிறேன்.

அவர் போன்றே நண்பர் ஜெமீல் (தலைவர் அரச வர்த்தக கூடடுத்தாபனம்) அவர்களும் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை சமூக நலனுக்கு பயன்படுத்தக் கூடியவர். அவரிடம் எனக்குப் பிடித்த விடயம் ஆமை போன்ற செயற்பாடே.. இங்கு நான் ஆமையின் தாமதமான செயற்பாட்டைக் கூறவில்லை. ஆமை ஆயிரம் முட்டை இட்டாலும் அமைதியாக இருக்கும் என்பதனை ஜெமீலுக்கு ஒப்பிடுகிறேன். அவர் சேவை செய்கிறார். ஆனால் ஒரு முட்டையை இட்ட கோழி போல் கொக்கரித்து ஊரைக் கூட்டமாட்டார்.  

சரி இனி விடயத்தை தொடர்கிறேன். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு ரிஷாத்அவர்கள் வழங்கியுள்ள பதவிகளின் எண்ணிக்கைக்குச் சமனான பதவிகளை இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அவரது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கியிருப்பாரே என்பதும்சந்தேகமே! அமைச்சர் ஹக்கீம் கட்சியில் சேர்ந்தால் ஒன்று கிடையாது. ரிஷாத் கட்சியில் சேர்ந்தால் நமக்கு ஜொப்தான்” என்ற ஒரு மாமூலனான பேச்சு இப்போது எங்கும் அடிபடுக்கிறது. ஆனால், இவையெல்லாம்ரிஷாத்துக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல.. கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் முக்கியமான பொறுப்புகளை அமைச்சர் வழங்கியமையானது பதவி பெற்றவர்களை மக்களிடமிருந்து பிரித்து, தூரமாக்கி மேட்டுக்குடி வாழ்கைக்குகே அவர்களை இட்டுச் சென்றுள்ளனர். இந்த விடயத்தில் நான் அனைவரையும் குறறம் சொல்வில்லை. பொத்துவில் (எஸ்.எஸ்.பி) மஜீத், முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் போன்றோரையோ நேரடியாக குறை காணுகிறேன். மிகப் பொறுப்புமிக்க பதவிகளைஇவர்களுக்கு அமைச்சர் வழங்கியதால் அவர்கள் மக்களிடமிருந்து தூரமாகி குளிரூட்டி அறைகளுக்குள்ளே தங்கள் நாட்களை அதிகளவில் கடத்துகின்றனர் என நான் அடித்துக் கூறுவேன். இவ்வாறானவர்களை இன்று மக்கள் எளிதில் சந்திக்க முடியாமல் உள்ளது. அவர்களது தேவைகள் தொடர்பில் எடுத்துரைக்க சந்த்ர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான போக்குகள் காரணமாக கட்சியின் அம்பாறை மாவட்ட அடிமட்ட   தொண்டர்கள் இன்று விரக்தி நிலைக்குச் சென்றுள்ளனர்.ஹக்கீமையும் அதாவுல்லாவையும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தேர்தல் நடந்தால் அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த 33,000 வாக்குகளில் 13 ,000 மாவது கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், உண்மையில் கட்சிக்கு விசுவாசமானர்கள் என்றால் அவர்களது பதவிகளைப் பெறும் தேவையும் இல்லை. கொடுக்கும் கடமையும் இல்லை. சமூகம், கட்சி, தலைமை, விசுவாசம் என்பனவற்றையே  ஒருவன் உண்மையாக நேசிப்பவனாக இருந்தால் அவன் எந்தப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.அதே போன்று கொடுக்கும் தேவைகளும் இல்லை என்பதனை இங்கு பகிரங்கமாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்ச் ரிஷாத் அவர்களே நீங்கள் ஆயிரம் பேருக்கு பதவி கொடுத்தாலும் வாக்களிக்கப் போவது மக்கள்தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். கடந்த காலங்களில் 33,0000 வாக்குகளை நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் பெற இவர்கள்தான் உங்களுக்கு உதவியதாக இருந்தார்கள் என நீங்கள் கருதுவீர்களானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உங்கள் கட்சி பின்னடைந்தால் அதற்கான காரணமும் இவர்கள்தானே என்பதனை உணர்ந்து  நீங்கள் வேதனைப்படும் நாளையும் நீங்கள் நிச்சயம் எதிர்கொள்வீர்கள்.   இதனை நான் உங்களுக்குச் சதியம் செய்து கூறுகிறேன்.

சரி நீங்கள் பதவிகளைக் கொடுங்கள் ஆனால், அவர்களை மக்களுடன் ஒன்றித்து நிற்கச் செய்யுங்கள். மக்களிடமிருந்து இவர்கள் தூரமாகி துரைத்தனமாக வாழ்வதற்கு அனுமதியாதீர்கள். இந்த விடயத்திலாவது நீங்கள் உங்கள் கண்டிப்பை வெளிப்படுத்துங்கள்.

அமைச்சர் அவர்களே! எனது கருத்துகளை நீங்கள் உள்வாங்கி உடன் செயற்படாவிட்டால் இறுதியில் நீங்கள் அசோக் லேலண்ட பஸ்ஸில் கூடச் செல்ல முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டு கால் நடையாகப் போகும் நிலைக்கு உங்களை உங்களது அம்பாறை  மாவட்ட அரசியல் பிரமுகர்களேமாற்றி விடுவார்கள் (BECAREFULL) கவனம்.

 

இறுதியாக உங்களால் பதவி வழங்கப்பட்ட எனது நண்பரான ஏ.ஆர்.எம். ஜிப்ரி, எனது உறவினரான முஹிதீன் பாவா ஆகியோர் தொடர்பில் நான் எந்தக் கருத்துகளையும் இங்கு தெரிவிக்கவில்லை. ஏனெனில் இவர்கள் இருவரும் நிர்வாக சேவை அதிகாரிகளாகவே நீங்கள் நியமித்துள்ளதால். இந்த விடயத்தில் பிரச்சினை இல்லை என்பதே எனது கருத்து.

 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


அசோக் லேலண்ட் பஸ்ஸில் அல்ல… உங்களை கால்நடையாகவே செல்லும் நிலையை ஏற்படுத்துவர்.. அசோக் லேலண்ட் பஸ்ஸில் அல்ல…  உங்களை கால்நடையாகவே  செல்லும் நிலையை ஏற்படுத்துவர்.. Reviewed by Madawala News on 10/14/2016 07:54:00 PM Rating: 5