Oceas

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் ...



நாட்டில் உள்ள பொருமதியான வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை பிரதமர் ரனில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளதாக தேசிய பிக்கு முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து அவ்வமைப்பு இந்த குற்றசாட்டை முன்வைத்தது.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பொதுசெயலாளர் பகமுல்லே உதித தேரர் ...
 
நாட்டில் உள்ள பொருமதியான வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை பிரதமர் ரனில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே பல அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளது.இது தவிர நாட்டின் வளங்கள் தற்போது வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சி யின் புதிய லிபரல் கொள்கையை அக்கட்சி தற்போது கையில் எடுத்துள்ளது.

நாட்டின் உள்ள சேவை சந்தையை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்பனை எந்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி உடன் தலையிட்டு தனது நிறைவேற்று அதிகாரத்தினை பாவித்து இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் ... ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் ... Reviewed by Madawala News on 10/18/2016 07:29:00 PM Rating: 5