கண்டி, கலகெதர குடி நீர் வழங்கல் திட்டம் ...

கண்டி மாவட்டம், கலகெதர - மாவத்தகம பிரதேசத்தில் கடந்த தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள குடிநீர்  தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திப்பதற்கு கலகெதர - மாவத்தகம குடி நீர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று காலை 9.30மணிக்கு பரகஹதெனிய மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் மாவதகம மற்றும் கலகெதர நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்ட்டுள்ள நீர் விநியோகதத்தை மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதனால் 18,500 பேர் நன்மையடையவுள்ளனர். 

இத்திட்டமானது 3126 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அல்விஸ், பிரதேச சபை உருப்பினர் அம்ஜாட் முத்தாலிப் முன்னால் பிரதேச சபைத்தலைவர் குலசூரிய, மற்றும் சேனாரத்ன பண்டார உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்

தகவல்-றிஸ்மி ராஸிக் 
கலகெதர.
கண்டி, கலகெதர குடி நீர் வழங்கல் திட்டம் ... கண்டி, கலகெதர குடி நீர் வழங்கல் திட்டம் ... Reviewed by Madawala News on 10/09/2016 07:50:00 PM Rating: 5