Free Space

கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று முதல் மின்வெட்டு ! விபரம் இதோ ...


நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதனால்,இன்று (17) முதல் மின் வெட்டு இடம்பெறும் என மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மின் வெட்டு பற்றிய நேர அட்டவணை தொடர்பான முழு விபரம் மக்களுக்கு எனவும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒரு மணித்தியாளம் என்ற ரீதியில் இந்த மின்வெட்டு இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கே இந்த மின்வெட்டு அமுலபடுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சு நுரைச்சோலை மின் நிலையத்தின் கருவிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றைச் சீர் செய்யும் வரையில் மின் வெட்டு அமுல்படுத்த வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலைய செயலிழப்பினால் 900 மெகாவோட் மின்சார உற்பத்தி தேசிய கட்டமைப்புக்கு கிடைக்காமல் போவதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை சில பிரதேசங்களில் பகலில் இரண்டரை மணிநேரமும், இரவில் 1 மணிநேரமும்  மின் வெட்டு இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று முதல் மின்வெட்டு ! விபரம் இதோ ... கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று முதல் மின்வெட்டு  ! விபரம் இதோ ... Reviewed by Madawala News on 10/17/2016 07:34:00 AM Rating: 5