tg travels

ஜனாதிபதி கலந்துகொள்ளும் திருமலை மாவட்ட நிகழ்வு அழைப்பிதல் முஸ்லீம்கள் புறக்கணிப்பு ..


-திருமலை அஹமட் -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  எதிர்வரும்  வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில்  நடைபெறவுள்ள சுற்றாடல் பற்றிய கூட்ட அழைப்பிதழில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்  பட்டுள்ளதாக கவலை  தெரிவிக்கப்  படுகின்றது.

இந்த அழைப்பிதழின் பின்  பகுதியில் திருகோணமலை  மாவட்டத்தில்  உள்ள  விகாரை படம்  ஒன்றும், கோவில் படம்  ஒன்றும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாசல் படம் அச்சிடப்  படவில்லை.

திருகோணமலை  மாவட்டத்தில்  தற்போது நாற்பது வீதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இது  தவிர  ஜனாதிபதி  மைத்திரிபாலவின் வெற்றிக்கு  90 வீதத்திற்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்.

இப்படியான நிலையில்  ஏனைய மத சின்னங்களை மட்டும் வெளியிட்டு  முஸ்லிம்களின் கலாசார சின்னத்தை   வெளியிடாது அவர்களைப்  புறக்கணித்துள்ளமை குறித்து முஸ்லிம்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி கலந்துகொள்ளும் திருமலை மாவட்ட நிகழ்வு அழைப்பிதல் முஸ்லீம்கள் புறக்கணிப்பு .. ஜனாதிபதி கலந்துகொள்ளும் திருமலை மாவட்ட நிகழ்வு அழைப்பிதல் முஸ்லீம்கள் புறக்கணிப்பு .. Reviewed by Madawala News on 10/18/2016 07:47:00 AM Rating: 5