அக்கரைப்பற்றில் நாளை இரத்ததான நிகழ்வு..(ஏ.எல்.நிப்றாஸ்)
சமூக மேம்பாட்டு அமைப்பான 'வீ-ட்ரஸ்ட்' அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம், அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (16.10.2016) காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ளது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் அஸ்-ஸிறாஸ் மகாவித்தியாலயம் போன்றவற்றில்  2001ஆம் ஆண்டில் உயர்தரம் கற்று வெளியேறிய மாணவர்களால் உருவாக்கப்பட்ட வீ-ட்ரஸ்ட் அமைப்பானது சமூக கலாசாரம், வாழ்வாதாரம், கல்வி, அனர்த்த உதவி போன்ற பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், இவ்வமைப்பின் இன்னுமொரு முயற்சியாக மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யவுள்ளனர். உதிரம் கொடுத்து உயிரைக்காப்பதில் ஈடுபாடுள்ள சமூகநலன் விரும்பிகளான ஆண், பெண் இரு பாலாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்றில் நாளை இரத்ததான நிகழ்வு.. அக்கரைப்பற்றில் நாளை இரத்ததான நிகழ்வு.. Reviewed by Madawala News on 10/15/2016 09:45:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.