Ad Space Available here

காலம் கடந்தாவது உண்மை விளங்கியுள்ளமை விஷேட அம்சமாகும் !


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் தாழ்த்தியாவது உண்மை விளங்கியுள்ளமை ஒரு விசேட அம்சமாகும் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாக இருந்தால், அவை தொடர்பில் தான் தீர்மானம் எடுக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தையிட்டு, தான் ஆச்சரியப்படுகின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று நாடு முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கியுள்ள வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நாட்டு மக்கள் சிறந்த விளக்கமொன்றைக் கொண்டுள்ளனர். இருப்பினும், நாட்டைக் கொண்டு செல்லும் நிருவாகிகளுக்கு இது பற்றிய விளக்கம் போதாதுள்ளது.

எனது மட்டக்களப்பு விஜயத்தின் போது அம்மக்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் தெரிவித்தார்கள். இதுபோன்று சகல மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அவர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், ஆச்சரியம் என்னவென்றால், நாட்டை வழி நடாத்துபவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார். -DC-

காலம் கடந்தாவது உண்மை விளங்கியுள்ளமை விஷேட அம்சமாகும் ! காலம் கடந்தாவது உண்மை விளங்கியுள்ளமை விஷேட அம்சமாகும் ! Reviewed by Madawala News on 10/14/2016 07:37:00 AM Rating: 5