Ad Space Available here

யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது இலங்கை மாயம் !


-லத்தீப் பாரூக்-
ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் உரிமைக்காக சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்த குரல் இலங்கையின் குரல்.ஆனால் இஸரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஜெரூஸலம் நகரில் அல் குத்ஸ் வளாகத்துக்குள் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஹரம் அல் ஷரப் பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் 2016 அக்டோபர் 13ல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது இலங்கையின் குரல் மௌனித்துப் போய்விட்டது.

மிகவும் கௌரவமான முறையில் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த இலங்கையின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகும்.இது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த 1.5பில்லியன் முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும். 

இலங்கையில் யார் ஆட்சியில் இருந்த போதிலும் சரி இந்த நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது உலக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து நேசக்கரம் நீட்டி வந்துள்ளது. இருந்தாலும் கூட துரதிஷ்டவசமாக இந்த நாட்டின் பிரதான ஊடகங்கள் இந்த விடயத்தை அவ்வளவு தூரம் வெளிப்படுத்தியதில்லை.

இந்த வாக்கெடுப்பின் போது இலங்கை கலந்து கொள்ளாமையானது நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள, கண்மூடித்தனமாக அமெரிக்காவைப் பின்பற்றுகின்ற நல்லாட்சி அரசின் குறுகிய நோக்கு கொண்ட வெளிநாட்டு கொள்கையின் வங்குரோத்து நிலையையே பிரதிபலிக்கின்றது. இதன் மூலம் முஸ்லிம் உலகத்தின் மீது யுத்தக் குற்றம் புரிந்து வரும் ஏனைய அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேலின் வரிசையில் இலங்கையும் இணைந்து கொண்டுள்ளது.

மேலும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் சந்தோஷப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு இந்த நாட்டு முஸ்லிம்கள் இந்த ஆட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கிய பங்களிப்பை தட்டிக்கழித்துள்ளது. சுமார் 24 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடம் ஏற முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பு மகத்தானதாகும்.

யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு) அதன் தீhமானத்தில் இஸ்ரேலின் எல்லை மீறிய ஆக்கிரமிப்பு அதன் சட்டவிரோத செயற்பாடுகள் என்பன வன்மையாகக் கண்டிக்கப் பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் குறிப்பிட்ட இடத்தின் வரலாற்று பெருமைகளையும் அந்தஸ்த்தையும் மதித்து அது மேற்கொள்ளும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வலதுசாரி தீவிரவாதிகளாலும் சீருடை அணிந்த படையினராலும் ஹரம் இல் ஷரப் பகுதி தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதை இந்தத் தீர்மானம் வன்மையாகக் கண்டித்துள்ளது.மலை ஆலயம் மற்றும் மேற்கு மதில் பகுதிகளின் மீதான யூத பிணைப்பை இந்தத் தீர்மானம் நிராகரித்துள்ளது. ஜெரூஸலம் நகரின் புராதன பகுதிகளுக்கு அவற்றின் பண்டைய முஸ்லிம் பெயர்களே இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆத்திரமூட்டும் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு இந்தப் பகுதிகளின் ஒருமைப்பாட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு இஸ்ரேலின் செயற்பாடுகள் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த தீர்மானத்தின் ஆரம்பத்திலேயே ஏக தெய்வக் கோட்பாடுடைய மூன்று சமயங்களுக்கும் பழைய ஜெரூஸலம் நகரின் முக்கியத்துவமும் அவற்றின் சுவர்களின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதன் பிறகு இஸ்ரேல் மீதான கண்டனங்கள் தொடருகின்றன. அதன் பிறகு ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்புச் சக்தியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.நீண்டகாலமாக அது இழைத்து வரும் தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இஸ்ரேலின் வலது சாரி தீவிரவாதிகளால் அல் அக்ஸா, அல்ஹரம் மீதான தொடர் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளளன. மலை ஆலய வளாகம் மற்றும் அதற்குள் வரும் பள்ளிவாசல் என்பனவற்றை குறிக்க முஸ்லிம்கள் பயன்படுத்தும் பெயர்களே இவையாகும்.

மேற்கு பகுதி வோல் பிளாஸா பிரதேசத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் பணிகளும் இந்தத் தீர்மானத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் அல் புறாக் பிளாஸா என்பதாகும். இது முஸ்லிம்களால் பயன்படுத்தப்படும் சொல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி என்பனவற்றுக்குப் பின் மூன்றாவது புனித பிரதேசமாக கருதப்படும் இடமே இந்த மஸ்ஜிதுல் அக்ஸாவாகும். எனவே இது உலக முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மிகவும் நெருக்கமான பிரதேசமாகும். 1967 ஜுனில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் ஜெரூஸலத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அல் அக்ஸாவுக்கு தொழுவதற்காக வரும் மக்கள் மீதும் இந்த வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

'நிராயுதபாணிகளான பலஸ்தீனர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர். ஜெரூஸலம் பள்ளிவாசலுக்கு வருகை தரும் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளை கட்டவிழத்து விடும் யூத தீவிரவாத குழுக்களுக்கு இஸ்ரேல் பக்கபலமாக உள்ளது. அல் அக்ஸா பள்ளிவாசலைத் தகர்த்து விட்டு அந்த இடத்தில் மூன்றாவது ஆலயம் ஒன்றை நிறுவுவதே இவர்களின் நோக்கம்' என்று மஆம் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கைக்குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், இறப்பர் தோட்டாக்கள், ஜீவ தோட்டாக்கள் என சகல விதமான ஆயுதங்களும் இறை வழிபாட்டுக்காக வரும் பலஸ்தீன மக்கள் மீது பாவிக்கப்படுகின்றன. இவை அன்றாட நிகழ்வுகளும் ஆகிவிட்டன. தாக்குதல் நடத்தும் தீவிரவாத சக்திகளுக்கு ஜெரூஸலம் மாநகர சபையும் அரசாங்க அமைச்சுக்களும் உத்தியோகப்பூர்வமாக முழு ஆதரவையும் வழங்கி வருகின்றன.

பலஸ்தீன தொண்டர்களுக்கு இந்தப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்க தொடர்ச்சியான தடைகளை விதித்து இஸ்ரேல் மிகவும் தந்திரமாக தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வருகின்றது.
இஸ்ரேல் இந்த வளாகத்தை யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என பௌதிக ரீதியாக இரண்டாகப் பளவுபடுத்தலாம் என்பதே தற்போது எதிர்நோக்கப்பட்டுள்ள உடனடி அச்சமாகும். 1994இல் இந்த சூத்திரத்தை ஹெப்ரூன் நகரில் உள்ள இப்றாஹிமி பள்ளிவாசலில் பிரயோகித்தது. 

அமெரிக்காவில் பிறந்த யூத குடியேற்றவாசி ஒருவர் இந்தப் பள்ளிவாசலில் புனித றமழான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 29 பலஸ்தீனர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததை அடுத்து இஸ்ரேல் அந்த பள்ளிவாசலை இரண்டாகப் பிரித்தது.

இவ்வாறான பின்னணியில் யுனெஸ்கோ தீர்மானம் நீதியை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிமிப்பு படைகளின் கொடூரங்களையும் சட்டவிரோத செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.
இவ்வாறான அநீதியான பின்னணியில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இலங்கை தவிர்ந்து கொண்டமை இலங்கை அரசு நீதியையும் நியாயத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை புலப்படுத்துகின்றது. பலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கையை இலங்கை அரசு புறக்கணித்துள்ளது. 
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை அது உதாசீனம் செய்துள்ளது. இஸ்ரேலின் சட்டத்தை மதிக்காத காட்டு மிராண்டித் தனமான போக்கிற்கு இலங்கை அரசு ஆதரவளித்துள்ளது.எல்லாவிதமான தார்மீக கோட்பாடுகளையும் ஒழுக்க விதிமுறைகளையும், சட்ட ரீதியான இன ரீதியான விழுமியங்களையும் தட்டிக் கழித்து விட்டு உருவாக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல்.

1930 முதல் பலஸ்தீன மக்களுக்கு எதிராக அது 60க்கும் அதிகமான பாரிய மனிதப் படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாரம்பரிய மேலைத்தேச ஆதரவு சிந்தனையின் அடிப்படையில் நோக்குகின்ற போது இலங்கை இந்த வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்து கொண்டமை ஒன்றும் புதுமையாகவும் இல்லை. எண்ணெய் வளம் மிக்க ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து சுமார் 15 லட்சம் மக்களை கொன்று குவித்து அந்த நாட்டை அமெரிக்கா சூறையாடிய போது அதை கண்டிக்க மறுத்த விரல் விட்டு எண்ணக் கூடிய உலகின் அப்போதைய பிரதமர்களுள் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர் என்பது இங்கே நினைவூட்டத்தக்கது.

ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை அப்போதைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கண்டிக்க முனைந்தார்கள். ஆனால் அரசாங்கத்தை விட்டு விலகி நின்று அதை செய்யுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கூறியதாகவும் சில தகவல்கள் உள்ளன. 1960 களிலும் 1970 களிலும் உலக அமர்வுகள் பலவற்றில் சுதந்திரத்துக்காவும் அடக்கு முறைக்கு எதிராகவும் இலங்கையின் குரல் ஓங்கி ஒலித்தபோது அது மிகவும் கௌரவத்தோடு செவி மடுக்கப்பட்டது. இன்றைய நிலையில் சர்வதேச அரங்கில் நியாயத்துக்காக குரல் கொடுத்து இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்பதே இன்றைய அவசர தேவையாகும். கொடூரமான இஸ்ரேலிய யுத்தக் குற்றவாளிகளுக்கு செங்கம்பளம் விரிப்பதால் இது சாத்தியமாகாது.
ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இஸ்ரேல் இலங்கைக்குள் தனது மூக்கை நுழைக்க பல தடவைகள் முயன்றுள்ளது. ஆனால் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளால் அது வெளியேற்றப்பட்டு வந்துள்ளது.

பலஸ்தீனர்களின் உரிமைகளுக்கான குரலாக தன்னை சித்தரித்துக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தான் இஸ்ரேலுக்கான கதவுகளை மீண்டும் திறந்து விட்டவர். அந்த சந்தர்ப்பத்தை சியோனிஸ்ட்டுகள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் றட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோரும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவுக்கும் இஸ்ரேலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று முதல் பல அமைச்சர்களும் உயர் அரச அதிகாரிகளும் இஸ்ரேல் சென்று வந்துள்ளனர். உண்மையில் இஸ்ரேலைப் பொறுத்தமட்டில் இது பெரும் சாதனையாகும்.

இஸ்ரேலுக்கு சார்பான இந்தக் கொள்கை தற்போது மிகத் தீவிரமாகப் பின்பற்றப்படுகின்றது. ஐ.தே.க தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் யூதர்களுக்கு இந்த நாட்டின் கதவுகள் தாராளமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் உலகளாவிய வேலைத் திட்டமாகும். எனவே இலங்கையுடன் இஸ்ரேல் உறவுகளைப் பேணுவது உண்மையில் எந்த வகையிலும் இலங்கைக்கு உதவுவதற்காக அல்ல. 

மாறாக அவர்களது நிகழ்ச்சி நிரலை இலங்கையில் அமுல் செய்து இலங்கையை கொலைகளமாக மாற்றி இரத்த ஆறை ஓட வைப்பதுதான் அவர்களின் திட்டமாகும்.

ஜெர்மனின் நாசிப் படைகளால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நாடகமாடி உலக அரங்கில் தமக்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் யூதர்களால் ஜெர்மனியில் நிறுவப்பட்டுள்ள ஹொலோகோஸ்ட் நூதனசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விஜயம் செய்ய வைத்தது அவர்களுக்கு அண்மைக்காலத்தில் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

அமெரிக்க ஐரோப்பிய ஆதரவில் பலஸ்தீன பூமியில் தமக்கான ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே இந்த நூதனசாலையாகும். இந்த விஜயத்தின் பாரதூரத் தன்மை அது ஏற்படுத்தும் தாக்கங்கள் என்பனவற்றை புரிந்து கொள்ளத் தவறிய ஒரு மனிதராகவே மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் செய்துள்ளார்.

அகண்ட இஸ்ரேலிய ராஜ்ஜியத்தை உருவாக்கும் நோக்கில் உலகம் முழுவுதும் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம் எனும் போர்வையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் முடிவு கட்டும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அழிப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றன. இந்த அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் அச்சில் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அரசும் தற்போது இணைந்துள்ளது. இவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதை தங்களத பிரகடமாகவே வெளியிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தச் சக்கர அச்சில் இப்போது இலங்கையும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. அதற்கான அறிகுறிகளைக் காணக் கூடியதாக உள்ளது. சிவசேனை அமைப்பு இலங்கையின் வவுனியாவில் தோற்றம் பெற்றுள்ளமையும் நல்லாட்சி அரசு அதனைக் கண்டும் காணாமல் விட்டு வைத்துள்ளமையும் இதற்கு உதாரணமாகும். ஆனால் இந்த சில்லுக்குள் சிக்கண்டும் கூட இலங்கை எதிர்ப்பார்க்கும் வெளிநாட்டு முதலீடு இன்னும் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும். மாறாக வளைகுடா நாடுகளில் இருந்து அனுப்பப்படும் புலம் பெயர்ந்த உழைப்பாளிகளின் வருமானத்திலேயே இலங்கை இன்றும் பாரிய அளவில் தங்கியுள்ளது. இந்த வருமானம் இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும் என்பதே யதார்த்தம்.

(முற்றும்)
யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது இலங்கை மாயம் ! யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது இலங்கை மாயம் ! Reviewed by Madawala News on 10/23/2016 08:52:00 PM Rating: 5